கம்பராமாயணம் 6313 · யுத்த 3.83

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எறிந்த, எய்தன, எற்றின, குற்றின, ஈர்ந்தன, படையாவும்
முறிந்த, நுண்பொடி ஆயின, முடிந்தன; முனிவு இலான் முழுமேனி
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின; தூயவன் துணிவு ஒன்றா
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன்; அயர்த்திலன், அவன் நாமம்.

பொருள் · Meaning in Tamil

எறிந்த எய்தன - வீசி எறிந்த வேல் முதலியனவும், வில்லில் பூட்டி எய்த அம்பு முதலானவையும்; எற்றின, குத்தின- வெட்டியவாள் முதலியனவும், குத்திய ஈட்டி முதலானவையும்; ஈர்த்தன படையாவும்- பிளக்கும்படி ஓச்சிய மழு முதலியனவும் ஆகிய எல்லா ஆயுதங்களும்; முறிந்து நுண் பொடி ஆயின முடிந்தன - முறிந்து நுண்ணிய துகள்களாகி முடிந்துபோயின; முனிவு இலான் முழுமேனி - சினத்தை வென்றவனான அந்தப் பிரகலாதனுடைய முழுமையான திருமேனியை; சொறிந்த தன்மையும் செய்திலவாயின - சொரிந்த தன்மையும் செய்யாதனவாயின; தூயவன் துணிவு ஒன்றா - தூயவனாகிய பிரகலாதன் தன் துணிந்த முடிவில் ஒன்றியவனாக; அறிந்த நாயகன் - தான் தெளிந்து அறிந்த தலைவனான திருமாலின்; சேவடி மறந்திலன் - செம்மையான திருவடிகளை மறக்கவில்லை; அவன் திரு நாமம் அயர்த்திலன் - அப்பரமனது திருநாமத்தையும் மறந்தானில்லை;

தாக்கும் கருவிகளின் பல்வேறு வகைகளை அவற்றின் செயல் குறித்த பல வினைச் சொற்களால் குறித்தார். ஒன்றா - ஒன்றி. துணிவு ஒன்றா - தான் துணிந்த துணிவிலேயே ஒன்றிநின்று. செம்மை + அடி - சேவடி. நிறத்தால்மட்டுமன்றி அடியவர் துயர் நீக்குதலில் பெருமளவு துயர் அறுமாதலின் பண்பிலும் செம்மை உடைய அடி என அறிதல் வேண்டும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Every weapon they threw, shot, struck, stabbed or hacked with
  2. broke, turned to fine powder and was finished; on the whole body of the one without anger
  3. they did not even make a scratch; the Pure One, fixed in his resolve,
  4. did not forget the red feet of the Lord he knew, nor lose hold of his name.

What the poem says

Every kind of weapon shatters into dust against Pirakalātaṉ's body without leaving a mark. Free of anger at his attackers, he keeps his mind fixed on Viṣṇu's feet and keeps repeating his name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṟinta, eytaṉa, eṟṟiṉa, kuttiṉa, īrttaṉa, paṭai yāvum
muṟintu, nuṇ poṭi āyiṉa, muṭintaṉa; muṉivu ilāṉ muḻu mēṉi
coṟinta taṉmaiyum ceytila āyiṉa; tūyavaṉ tuṇivu oṉṟā
aṟinta nāyakaṉ cēvaṭi maṟantilaṉ; ayarttilaṉ, avaṉ nāmam.