கம்பராமாயணம் 6314 · யுத்த 3.84

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 -
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'உள்ள வான்பெரும் படைக்கலம் யாவையும் உக்கன - உரவோய் நின்
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது; இனிச் செயல் என்கொல் பிறிது?''என்ன,
"கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள்; கதுமெனக் கனல் பொத்தித்
தள்ளுமின்''என உரைத்தனன்; வயவரும், அத்தொழில் தலை நின்றார்.

பொருள் · Meaning in Tamil

உரவோய் - வலிமைமிக்கவனே!; உள்ளஉலப்பிலயாவையும் வான்படை - எங்களிடம் உள்ள அளவற்ற சிறந்த படைக்கலங்கள் எல்லாமே; உக்கன -வீணே அழிந்து பொடிந்தன; நின் பிள்ளை மேனிக்கு - உனது மைந்தனது உடலுக்கு; ஓர் ஆனி வந்திலது - ஒருவிதத் துன்பமும் வரவில்லை; பிறிது இனிச் செயல் என்கொல் - வேறு, இனி எங்கள் காரியம் என்ன?; என்ன -என்று வீரர்கள் இரணியனைக் கேட்க; கதும் எனக் கனல் பொத்தித் தள்ளு மின் - விரைவாக நெருப்பை மூட்டி அதில் அவனைத் தள்ளுங்கள்; என உரைத்தனன் - என்று இரணியன் வீரர்களை நோக்கிக் கூறினான்; வயவரும் - அந்த வீரர்களும்; அத் தொழில் தலை நின்றார் - அந்தக் காரியத்தைச் செய்யத் தலைப்பட்டார்கள்.

வான் படை - சிறந்த ஆயுதங்கள். உக்கன - பொடிந்தன. ஆனி - துன்பம் (ஹானி என்ற வடமொழிச் சொல்லின் சிதைவு). கதும் - விரைந்து. பொத்தி - மூட்டி. பரமன் அருளால் தப்பினான் என இரணியன் ஏற்கவில்லை; மாய மந்திரங்களால்தான் பிரகலாதன் கருவிகளைக் கட்டிவிட்டான் எனக் கூறுகிறான். ஆணவத் திரையின் மறைப்பு எப்போதும் உண்மை காணவிடாது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the countless fine weapons we had have crumbled; mighty one, on your
  2. son's body not a single harm has come; what more is there to do? they asked;
  3. The deceitful-hearted boy has bound the weapons by spells; quickly light a fire
  4. and throw him in, he said; and the soldiers set about that task.

What the poem says

The executioners report their failure. Iraṇiyaṉ refuses to see God's protection and accuses his son of using magic to stop the weapons. He orders him burned instead. The commentary remarks that pride always hides the truth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'uḷḷa vāṉ paṭai ulappila yāvaiyum ukkaṉa - uravōy niṉ
piḷḷai mēṉikku ōr āṉi vantilatu; iṉic ceyal eṉkol piṟitu?'' eṉṉa,
"kaḷḷa uḷḷattaṉ kaṭṭiṉaṉ karuvikaḷ; katumeṉak kaṉal pottit
taḷḷumiṉ'' eṉa uraittaṉaṉ; vayavarum, at toḻil talainiṉṟār.