கம்பராமாயணம் 6315 · யுத்த 3.85

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குழியில் குன்றென இந்தனம் அடுக்கினர்- தீமூட்டத் தொடங்கிய வயவர் பெரிய குழியிலே மலைபோல விறகுகளை அடுக்கினார்கள்; எண்ணெய் இழுது, நெய்- எண்ணெயும், வெண்ணெயும், நெய்யும்; குடம் தொறும் கொணர்ந்து - குடம் குடமாகக் கொண்டுவந்து; சொரிந்திட்டனர் - அடுக்கிய விறகின்மீது சொரிந்தார்கள்; விசும்புஎட்ட நெருப்பு எழுந்திட்டது - ஆகாயத்தைத் தொடும்படி நெருப்புமேலே எழுந்தது; அழுது நின்றவர் அயர்வுற - இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் அழுது சோர்வடையும்படி; ஐயனைப் பெய்தனர் - பேரறிஞனான பிரகலாதனை தீயிலிட்டனர்; 'அரி' என்று நாயகன்தாள் இணைதொழுது நின்றனன் - திருமாலின் திருவடிகளைத் தியானித்து 'அரி' என்று கூறி வணங்கி நின்றான் பிரகலாதன்; சுடு தீ குளிர்ந்தது - சுடு நெருப்பு குளிர்ந்திருந்தது. (பிரகலாதனுக்கு எவ்வித ஊறுமில்லை).

இந்தனம் - விறகு. இழுது - வெண்ணெய். ஐ வியப்பாகும் என்பது தொல்காப்பியம். ஐயன் - வியப்பின் நிலைக் களமாகிய தலைவன் (பிரகலாதன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In a pit they piled firewood like a mountain; bringing pot after pot,
  2. they poured oil, butter and ghee; the fire rose up to touch the sky;
  3. while those watching wept and grew faint, they threw in the noble one; saying Ari,
  4. he stood worshipping the Lord's two feet; and the burning fire turned cool.

What the poem says

The fire is built in a pit heaped with wood and soaked with oil, butter and ghee until the flames reach the sky. Onlookers weep as the boy is thrown in. He simply calls out Ari, a name of Viṣṇu, and bows in his mind to God's feet, and the fire grows cool.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kuḻiyil intaṉam aṭukkiṉar, kuṉṟu eṉa; kuṭamtoṟum koṇarntu eṇṇey
iḻutu ney corintiṭṭaṉar; neruppu eḻuntiṭṭatu, vicumpu eṭṭa,
aḻutu niṉṟavar ayarvuṟa, aiyaṉaip peytaṉar; 'ari' eṉṟu
toḻutu niṉṟaṉaṉ, nāyakaṉ tāḷ iṇai; kuḷirntatu cuṭu tīyē.'