கம்பராமாயணம் 6316 · யுத்த 3.86

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 -
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கால வெங்கனல் கதுவிய காலையில் - கற்புடையவள் சொற்ற
சீல நல் உரைச் சீதம் மிக்கு அடுத்தலின், கிழியொடு நெய் தீற்றி,
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்தன்
கூலம் ஆம் என, என்பு உறக் குளிர்ந்தது, அக் குருமணித் திருமேனி.'

பொருள் · Meaning in Tamil

அக்குருமணித் திருமேனி - அந்தப் பிரகலாதனுடைய அழகிய மணி போன்ற நிறத்தை உடைய திரு மேனியானது; கால வெங்கனல் கதுவிய காலையில் - ஊழித் தீயைப் போன்ற கொடிய நெருப்புப் பற்றத் தொடங்கிய பொழுதிலே; கற்புடையவள் சொற்ற - கற்பரசியான சீதாபிராட்டி கூறிய; சீலநல்உரை- ஒழுக்கம் மிக்க நல்ல சொற்கள்; சீதம் மிக்கு அடுத்தலின் - குளிர்ச்சி மிகுந்து நெருங்கியதாலே; கிழியொடுநெய்தீற்றி- துணியைச் சுற்றி அதன்மேல் நெய் சொரிந்து; ஆலம் அன்னநம் அரக்கர்கள் - விடத்தை ஒத்த தீயவரான நமது அரக்க வீரர்கள்; வயங்கு எரிமடுத்தலின் - ஒளிரும் நெருப்பை மூட்டியதால்; அனுமன்தன் கூலம் ஆம் என - அனுமன் வால் எவ்வாறு குளிர்ந்து நின்றதோ அது போல; என்புறக் குளிர்ந்தது - எலும்பினளவும் குளிர்ந்தது.

அல்லலுறும் போதும் அருளாளர் மேனி சுடச்சுடரும் பொன்போல் தெய்விகப் பொலிவோடு விளங்கும் என்பதைக் குருமணித் திருமேனி என்ற விழுமிய தொடரால் குறித்தார். பிராட்டியின் சொல்லால் அனுமனை நெருப்புச் சுடாமையும் குளிர்ந்தமையும் முன் (5931, 5932) பிணிவிட்டு படலத்தில் உணர்த்தப்பட்டன. இராவணன் அறிந்த செய்தி ஆதலின் அதனை உவமையாகக் கூறினன். காலம் - ஊழிக்காலம். கதுவ - பற்ற. கற்புடையவள் - சீதாபிராட்டி, கூலம் - வால். என்புற - எலும்பினளவு. குரு - நிறம். மணி- நீலமணி. உரைசீதம் (உரையாகிய சீதம்) உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the fire hot as the world's end took hold, because the virtuous words
  2. spoken by the chaste one came close with abundant coolness, when our demons, like poison,
  3. wrapped rags, smeared them with ghee and set them ablaze, just like the tail of Aṉumaṉ,
  4. that beautiful jewel-like body was cooled to the very bone.

What the poem says

Vīṭaṇaṉ makes the comparison pointed for Irāvaṇaṉ. Pirakalātaṉ's body stayed cool just as Aṉumaṉ's tail did when Irāvaṇaṉ's demons wrapped it in oiled rags and set it alight, because Cītai's prayer made the fire cool. Irāvaṇaṉ saw that miracle himself and should learn from it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kāla veṅ kaṉal katuviya kālaiyil - kaṟpu uṭaiyavaḷ coṟṟa
cīla nal uraic cītam mikku aṭuttalil, kiḻiyoṭu ney tīṟṟi,
ālam aṉṉa nam arakkarkaḷ vayaṅku eri maṭuttaliṉ aṉumaṉtaṉ
kūlam ām eṉa, eṉpuṟak kuḷirntatu, ak kuru maṇit tiru mēṉi.'