கம்பராமாயணம் 6317 · யுத்த 3.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நின்தோன்றலை - உன்மைந்தனான பிரகலாதனை; சுடர்க்கனல் சுழிபடர் அழுவத்துள் - சுடர் விட்டெரியும் நெருப்பு சுழித்து எழுகின்ற பெருங்குழிக்குள்; இட்ட போதிலும்- தள்ளி விட்ட போதும்; சுட்டதில்லை- (அப்பெருந்தீ) அவனைச் சுட்டதே இல்லை; என்இனிச் செயத்தக்கது - இனிநாங்கள் செய்யத்தகுந்த செயல் என்ன; என்றனர் இகல்வெய்யோர்- பகைமைமிக்க கொடியவர்களான வீரர்கள் என்று கூறினர்; எரி எழுதறுகண்ணான் - தீப்பொறிபரக்கும் கண்களைஉடைய இரணியன் (அதைக் கேட்டுப்பின்); கட்டித் தீயையும் கடுஞ்சிறை இடுமின் - நமது ஆணையை மறுத்த அந்த தீக்கடவுளை, கால்கைகளைக் கட்டி சிறையிலே தள்ளுங்கள்; அக்கள்வனைக் கவர்ந்து உண்ண - அந்த வஞ்சகனைக் கவர்ந்து உண்ணும்படி, எட்டுப்பாம்பையும் - எட்டு நாகங்களையும்; விடுமின்கள் - கொண்டுவந்து விடுங்கள் என்றான்.
அழுவம் - பெருங்குழி. எட்டுப்பாம்புகள் - கார்க்கோடகன், அனந்தன், குளிகன், சங்கபாலன், தட்சகன், பதுமன், மகாபதுமன், வாசுகி என்றும் எட்டு நாகங்களாம். சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் மேனியைத் தன்னரிய திருமேனி என இரட்சணிய யாத்திரிகம் குறித்த (இரட்சணிய சரிதைப்படலம் 342) ஒப்பிடத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Your son was not burned, even when we threw him into the pit
- where the blazing fire whirls and spreads; what must we do now? said the cruel enemies;
- Bind the Fire god too and throw him into harsh prison; and to seize and devour that cheat
- let loose the eight serpents, said he whose fierce eyes shot out flames.
What the poem says
The fire has failed, and Iraṇiyaṉ's rage now turns even on Agni, the fire god. He orders him bound and jailed for disobeying. Then he commands that the eight great serpents of legend be sent to devour the boy he calls a cheat.