கம்பராமாயணம் 6318 · யுத்த 3.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனந்தனே முதலாகிய நாகங்கள் - அனந்தன் முதலான எட்டுப் பாம்புகளும்; 'அருள் என் கொல்' என்ன - அருள் கொண்டு எங்களை அழைத்தது எதற்காக என்று கேட்டு; அன்னான் நினைந்து மாத்திரத்து எய்தின - அந்த இரணியன் நினைத்த மாத்திரத்திலே வந்து அடைந்தன; நொய்தினில் - விரைவாக (இரணியன் கட்டளைப்படி); நெருப்பு உகு பகுவாயால் - நெருப்பை உமிழும் பெரிய வாயினால்; வனைந்த தாம் அன்ன மேனியினான் தன்மேல் - அழகாகச் செய்து வைத்தது போன்ற பிரகலாதன் உடலின் மேல்; வாள் எயிறு உற ஊன்றி - கூரிய பற்கள் உறும்படி ஊன்றி; சினம் தம் மீக் கொள கடித்தன- கோபம் மேலோங்க கடித்தன; திருப்பெயர் மறவாதான் - பரமனது திருநாமத்தை மறவாத உள்ளத்தவனான பிரகலாதன்; துடித்திலன் - (எட்டுப்பாம்புகள் கடித்தும்) துடித்தானல்லன்.
'வனைந்தனைய திருமேனி வள்ளல்' (690) என இராமபிரானை முன் குறித்த தொடராலேயே இங்கே பிரகலாதனைக் கவிஞர் குறித்தார். இயற்கைப் படைப்பில் முழு அழகும் அமைதல் அருமை; ஆனால், செயற்கையில் அழகெலாம் முற்றிலும் அமையுமாறு செய்யமுடியும். சிற்பி ஒருவன் அழகுமுற்றுறச் செய்த பாவை போன்றவன் பிரகலாதன். பகுவாய் - பிளந்தவாய். வனைதல் - புனைதல் (அழகு படுத்துதல்). உற - பதிய. மீக்கொள - மேலோங்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Aṉantaṉ and the other serpents, asking, What is your pleasure?, came
- swiftly the moment he thought of them; with gaping mouths that spilled fire,
- on him whose body seemed shaped by an artist, they drove in their sharp fangs
- and bit with mounting rage; he who never forgot the sacred name did not even flinch.
What the poem says
The serpents arrive the moment Iraṇiyaṉ thinks of them and bite savagely. Pirakalātaṉ, still repeating God's name, does not even flinch. The poet describes his body as if carved by a craftsman, words used earlier for Irāmaṉ himself.