கம்பராமாயணம் 6319 · யுத்த 3.89

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பக்கம் நின்று அவை பயத்தினின் புயல் கறை பசும்புனல் பகுவாயின்
கக்க, வெஞ்சினக் கலுழனும் நடுக்குற, கவ்விய காலத்து,
செக்கர் மேகத்துச் சிறு பிறை நுழைந்து அ(ன்)ன செய்கைய, வலி சிந்தி
உக்க, பற்குலம்; ஒழுகின எயிற்று இரும் புரைதொறும் அமிழ்து ஊறி.

பொருள் · Meaning in Tamil

அவை பக்கம் நின்று - அந்தப் பாம்புகள் பிரகலாதனுக்கு அருகே நின்று; பயத்தினில் - (இரணியனது ஆணையை மீறினால் என்ன செய்வானோ என்ற பயத்தினால்; புயற்கறைப் பசும்புனல் - மேகம் போல கரிய நச்சுக்கறை படிந்த பசிய இரத்தம்; பகுவாயின் கக்க - பிளவுபட்டவாயிலிருந்து சிந்த; வெஞ்சிறைக் கலுழனும் நடுக்குற - வெவ்விய இறகுகளை உடைய கருடனும் அஞ்சி நடுங்க; கவ்விய காலத்துள் - பிரகலாதனைக் கடித்துக் கவ்விய போது; செக்கர் மேகத்துள் - சிவந்த நிறமுடைய மேகத்திலே; சிறு பிறை நுழைந்தன செய்கைய - சிறிய பிறைச் சந்திரன் நுழைந்த செயலைப் போன்றன; வலி சிந்தி - தமது வலிமையை இழந்து; உக்க பற்குலம் - பற்களின் தொகுதி உதிர்ந்தன; எயிற்று இரும்புரை தொறும் - பற்களின் பெரிய துளைகள் தோறும்; அமிழ்து ஊறி ஒழுக - அமுதம் ஊறி ஒழுகுவனவாயின.

புயல் - மேகம் (கரிய) பசும்புனல் - இரத்தநீர். கலுழன் - கருடன். செக்கர் - செந்நிறம். அவை, பக்கம் நின்று, வாயில் - புனல்கக்க கவ்விய காலத்துள் - செய்கைய - உக்க பற்குலம் - அமிழ்து ஒழுக என இயையும். நாகங்கள் உகுத்த நஞ்சு அமுதாயிற்று. அஷ்ட நாகங்களும் தெய்விகச் சன்னிதியில் பலம் இழந்து, பல்லும் இழந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Standing by him, out of fear, they spat from their gaping mouths green venom dark as cloud,
  2. while even Garuḍa of the fierce wings trembled; at the moment they bit,
  3. like small crescent moons sinking into a red evening cloud,
  4. their teeth lost their strength and fell out, and nectar welled and flowed from every hole of their fangs.

What the poem says

The snakes bite so fiercely that even Garuḍa, their natural enemy, shudders. But their curved fangs, like crescent moons in a red sky, crumble and fall out, and instead of poison, nectar flows from the holes. In the divine presence the serpents lose their power.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pakkam niṉṟavai payattiṉiṉ puyaṟ kaṟaip pacum puṉal paku vāyiṉ
kakka, veñ ciṟaik kaluḻaṉum naṭukkuṟa, kavviya kālattuḷ,
cekkar mēkattuc ciṟu piṟai nuḻaintaṉa ceykaiya, vali cinti
ukka, paṟ kulam; oḻuka eyiṟṟu irum puraitoṟum amiḻtu ūṟi.