கம்பராமாயணம் 6320 · யுத்த 3.90

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சுற்றும் சூழப்பற்றின - (பாம்புகள் வலியிழந்து - பற்கள் உதிரப் பார்த்த வீரர்கள் இரணியனிடம் சென்று பிரகலாதனை) சுற்றிலும் சூழ்ந்து பற்றிய பாம்புகள்; எயிற்றின் போழக் கிற்றில - பற்களால் அவனுடலைப் பிளக்கும் வன்மை இலவாயின; என்று புகன்றார் - என்று கூறினார்கள் (அதைக் கேட்ட இரணியன்); திக்கின் மயக்கின் மதம் தாழ் வேழத்துக்கு இடுமின் - மயக்கம் உடையதும் மதம் கொண்டது மான திக்குயானைக்கு இடுங்கள்; எனவிட்டான் - என்று கூறி அனுப்பினான்.

கிற்றில - இயலாதனவாயின. ஆற்றலை உணர்த்தும் 'கில்' என்னும் இடைச்சொல்லைப் பகுதியாகக் கொண்டு 'கிற்றில' என்னும் வினைமுற்று உருவாகியது. வாழி - அசை. திக்கின் வேழம் இங்கே கிழக்குத் திசைக்குரிய ஐராவதம் என்ற யானை. இங்கே குறித்த கிழக்கென்பது அடுத்த பாடலில் தெளிவாகும். மதம் தாழ் - மதம் மிகுந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The serpents that coiled around him on every side
  2. could not split him with their fangs, they said;
  3. Throw him to the elephant of the quarter, frenzied and pouring must,
  4. he said, and sent them.

What the poem says

The soldiers report that the snakes have failed. Iraṇiyaṉ next orders the boy thrown before one of the great elephants that guard the directions, maddened and in rut.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'cūḻap paṟṟiṉa cuṟṟum eyiṟṟiṉ
pōḻakkiṟṟila" eṉṟu pukaṉṟār;
"vāḻit tikkiṉ mayakkiṉ matam tāḻ
vēḻattukku iṭumiṉ" eṉa viṭṭāṉ.