கம்பராமாயணம் 6321 · யுத்த 3.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பசையில் தங்கல் இல் சிந்தையர் பல்லோர்- இரக்கம் எனும் பண்பிலே தங்காத மனத்தினரான வீரர்கள் பலர்; திசையில் சென்றனர் - (கிழக்குத்) திசை நோக்கிச் சென்றார்கள்; 'செப்பினன்' - (இரணியன் யானையை அழைத்துவரக் கூறினான்); என்னும் இசையில் - என்ற சொல்லால், இந்திரன் உடனே அனுமதிதர, தந்தனர் - (யானையைக்) கொணர்ந்தார்கள்; இந்திரன் என்பான் - இந்திரன் என்பவனுக்குரியதும்; விசையின் திண்பணை - வலிய, பெரிய தந்தங்களைக் கொண்டதும்; வெஞ்சின வேழம் - மிக்க கோபத்தை உடையதுமான ஐராவதத்தை(க்) கொணர்ந்தனர்.
பசை- இரக்கம். இசை- சொல். பணை - தந்தம். விசை - வலிமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Many whose minds held no trace of pity
- went to that quarter; at the word, He has ordered it,
- they brought the fierce, angry elephant of the one called Indra,
- with its strong, mighty tusks.
What the poem says
The pitiless servants go to the east and, at the mere mention of Iraṇiyaṉ's command, Indra hands over his elephant Airāvata. This shows how completely even the king of the gods obeys the demon.