கம்பராமாயணம் 632 · பால 10.80

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மென்முலை - மென்மையான தனங்களையுடைய சீதை; வாசம் மெல் - மணமும் மென்மையும் வாய்ந்த; கலவைக்களி - கலவைச் சந்தனக்குழம்பை, வாரி - அள்ளிக்கொண்டு; மேல் பூசப் பூச - (தோழிமார்) தன்னுடலில் பூசுந்தோறும்; புலர்ந்து - உடம்பு வெதும்பி; புழுங்கினள் - தவித்தாள்; வீச வீச வெதும்பினள் - (ஆல வட்டம் முதலியவற்றால்) வீசுந்தோறும் (சீதை) வெப்பம் அடைந்தாள்; ஆசை நோய்க்கு - காம நோயைத் தீர்க்க; மருந்தும் உண்டாம் கொல் - மருந்தும் உலகில் உண்டோ?

காம வேதனையால் வாடும் சீதையின் வெப்பத்தைத் தணிக்கத் தோழியர் செய்யும் பரிகாரம் யாவும் அவளுக்கு மேலும் வெப்பத்தை வளர்த்தன என்பதாம். ஆசை நோய்க்கு வேறு பரிகாரம் இல்லை: 'மருந்து பிறிதில்லை யானுற்ற நோய்க்கே' (நற். 80). மென்முலை: அன்மொழித்தொகை. வேற்றுப் பொருள் வைப்பணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though they scooped up fragrant soft sandal paste and
  2. smeared it on her again and again, she dried and sweltered;
  3. though they fanned and fanned, she of the soft breasts grew hotter —
  4. is there any medicine at all for the sickness of desire?

What the poem says

Her companions try every remedy. They plaster her with cool, fragrant sandal paste, but it dries on her skin and she only swelters; they fan her, but each stroke makes her hotter.

The verse ends with a general truth that sums up the scene: there is no cure for love-sickness. The commentary cites a similar line from the Naṟṟiṇai, which says there is no other medicine for the sickness the speaker suffers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāca meṉ kalavaik kaḷi vāri mēl
pūcap pūcap pularntu puḻuṅkiṉaḷ,
vīca vīca vetumpiṉaḷ meṉ mulai,
ācai nōykku maruntum uṇṭāmkolō!