கம்பராமாயணம் 633 · பால 10.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேனியில் - (சீதையின்) திருமேனியில்; காய் - எரியும்; எரி - காமத் தீயினால்; தாது உகு வீ - மகரந்தப் பொடிகள் சிந்தப்பெற்ற மலர்களைக் கொண்டும்; அரித்தளிர் - மெல்லிய தளிர்களைக்கொண்டும்; மெல் அணை - (அமைக்கப்பட்ட) மெல்லிய அவளுடைய படுக்கை மெத்தைகள்; கரியக் கரிய - கருகக்கொண்டேயிருக்க; தாயரின் பரி சேடியர் - தன்னைப் பெற்ற தாயரைவிட மிக்க அன்பு காட்டும் (சீதையின்) தோழியர்; ஆயிரத்தின் இரட்டி - இரண்டாயிரம் படுக்கை மெத்தைகளை; கொணர்ந்து - (ஒன்றன்பின் ஒன்றாகக்) கொண்டு வந்து; அடுக்கினார் - மேன்மேல் அடுக்கி அமைத்தார்கள்.
தோழியர் அன்போடு படுக்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆயிரத்து இரட்டி மிகப்பல. அரித்தளிர் அடர்த்தியை உடைய தளிர், பொன்னிறமான தளிர், ஒளியுள்ள தளிர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Her maids, more tender than mothers, as the soft couches of pollen-dropping
- flowers and delicate shoots were charred again and again
- by the burning fire in her body, kept bringing more
- and laid them down, twice a thousand of them.
What the poem says
Each bed of flowers and tender leaves made for Cītai is scorched black by the heat of her longing almost as soon as she lies on it. Her companions, who love her more than mothers do, keep bringing fresh ones and changing them, two thousand in all.
The number simply means a very great many; it is hyperbole to show both the intensity of her fever and the devotion of her maids.