கம்பராமாயணம் 634 · பால 10.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கன்னி நல் நகரில் - அழகிய கன்னி மாடத்தில்; கமழ் சேக்கையுள் - மணம் வீசும் மலர்ப்பள்ளி மெத்தையில்; அன்னம் - அன்னப்பெடை போன்ற சீதை, இன்னணம் ஆயினள் - இவ்வாறு காம வேதனை அடையலானாள்; ஆயவள் - (இனி) அச்சீதையினது; மின்னின் மின்னிய மேனி - மின்னலைப் போல விளங்கும் திருமேனியை; கண்டான் எனச் சொன்ன - பார்த்தான் என்று மேலே கூறிய; அண்ணலுக்கு - இராமனுக்கு; உற்றது - உற்ற நிலைமைகளை; சொல்லுவோம் - (இனிக் கூறத்) தொடங்குவோம்.
கன்னி மாடம் பெரிய நகரம் போல் விளங்கியதால் 'கன்னி நன்னகர்' என்றார். மின்னிய மேனியை - பெயரெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the fine maidens' city, on the fragrant couch,
- the swan-like one became thus. Now, what befell the noble one
- of whom we said that he had seen her body
- gleaming like lightning — that we shall tell.
What the poem says
A transition verse. Having described Cītai's night of longing in the maidens' palace, so large it is called a city, the poet turns to Irāmaṉ, who earlier saw her lightning-bright form on the balcony, and promises to tell what he went through in the meantime.