கம்பராமாயணம் 635 · பால 10.83

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏகி மன்னனைக் கண்டு எதிர்கொண்டு, அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திடப்,
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர்
மாக மாடத்து, அனையவர் வைகினார்.

பொருள் · Meaning in Tamil

அனைவரும் - (விசுவாமித்திரன் முதலிய) அம்மூவரும், ஏகி - அரசனது அரண்மனைக்குள் சென்று; மன்னனை - சனகராசனை; கண்டு - பார்த்து; அவன் - அவ்வரசன்; ஓகையோடும் - மகிழ்ச்சியுடன்; எதிர்கொண்டு - எதிரில் வந்து உபசரித்து; இனிது - இனிமையாக; கொண்டு - அழைத்துக்கொண்டு போய்; போக பூமியில் - (அதன்பின்) இன்ப பூமியான; பொன் நகர் அன்னது - அமராவதியில் உள்ள ஆடக மாடம் போலச் சிறந்த; ஓர் மாக மாடத்து - ஒரு வான் அளாவிய மாளிகையில்; உய்த்திட - சேர்ப்பிக்க; வைகினார் - (அங்கே) தங்கினார்கள்.

பொன்னகர் - பொன்மயமான மாளிகை; ஆடகமாடம் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They went and saw the king; he came out to receive them,
  2. and with gladness took them in kindly and led them on;
  3. in a sky-high mansion like the golden city in the land of delights
  4. they all made their stay.

What the poem says

Going back to earlier that day: Vicuvāmittiraṉ, Irāmaṉ and Ilakkuvaṉ enter the royal palace of Mitilai and meet King Caṉakaṉ. He receives them joyfully and conducts them to a lofty mansion as splendid as the golden palace in Indra's heavenly city, where they are lodged.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēki maṉṉaṉaik kaṇṭu etir koṇṭu, avaṉ
ōkaiyōṭum iṉitu koṇṭu uyttiṭap,
pōka pūmiyil poṉṉakar aṉṉatu ōr
māka māṭattu, aṉaivarum vaikiṉār.