கம்பராமாயணம் 636 · பால 10.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தீது அறு - குற்றம் இல்லாத; மொய்கொள் வீரன் - வலிமையுள்ள வீரனான இராமனது; முளரி அம் தாளினால் - செந்தாமரை போலும் திருவடித் துகளால்; மெய்கொள் மங்கை - பழைய உண்மை வடிவம் அடைந்த அகலிகை, அருள் - பெற்றருளிய; முனி - சதானந்த முனிவன்; வைகும் அவ்வழி - அவர்கள் தங்கிய மாளிகையிடத்தில்; மாதவம் யாவும் - பெருந்தவங்கள் எல்லாம்; ஓர் செய்கை கொண்டு - சீலமாகிய ஓர் உருவம் கொண்டு; நடந்து என - நடந்து வந்தது போல; மேவினான் - வந்தான்.
கௌதம முனிவனுக்கும் அகலிகைக்கும் பிறந்தவன் சதானந்த முனிவன். அவன் விசுவாமித்திரன் முதலியோர் வருகையை யறிந்து அவர்கள் தங்கிய மாளிகைக்குச் சென்றான். இவன் சனக அரசனது புரோகிதன். செய்கை - சீலம், ஒழுக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Where they were staying, as if all great austerities had taken
- one form of conduct and come walking, the sage arrived,
- son of the lady who regained her true body by the lotus feet
- of the faultless, mighty hero.
What the poem says
Catāṉantaṉ, the family priest of King Caṉakaṉ, comes to greet the guests. He is the son of the sage Kautamaṉ and of Akalikai, whom Irāmaṉ had just released from her curse by the touch of the dust of his feet, restoring her from stone to her true form.
So perfect is Catāṉantaṉ's discipline that he looks like all the great penances of the world gathered into one figure and walking.