கம்பராமாயணம் 6327 · யுத்த 3.97

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வீரத் திண்திறல் மார்பினில் வெள் கோடு
ஆரக் குத்தி அழுத்தியது ஆக
வாரத் தண் குலை வாழை மடல் சூழ்
ஈரத் தண்டு என இற்றன எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

வீரன்திண் திறல் மார்பினில் - மெய்வீரனான பிரகலாதனுடைய வலிய, ஆற்றல்மிக்க மார்பில்; வெண் கோடு ஆரக் குத்தி - வெண்மை நிறமான தந்தங்கள் பொருந்துமாறு குத்தி; அழுத்திய நாகம் - அழுந்தும்படி செய்த அந்த யானை; வாரத் தண்குலை வாழை - விருப்பம் மிக்க குளிர்ந்த குலை தள்ளிய வாழை மரத்தினது; மடல்சூழ் ஈரத்தண்டு என - மடல்களால் சூழப்பட்ட ஈரமான தண்டு என்னும்படி; எல்லாம் இற்றன - எல்லாத் தந்தங்களும் ஒடிந்து சிதைந்தன. நாகம் - யானை; ஐராவதம், நான்கு தந்தங்களை உடையது. 'எல்லாம் இற்றன' என்றதால் அந்த நான்கு தந்தங்களும் முறிந்தன என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into the strong, mighty chest of the hero it drove
  2. its white tusks deep and pressed them home — and that elephant's tusks
  3. all snapped, like the moist stalk, wrapped in sheaths,
  4. of a cool plantain heavy with fruit.

What the poem says

The elephant gores the boy's chest, but it is the tusks that give way. Airāvatam has four tusks, and the words "all snapped" mean that every one of them broke, as easily as the soft, layered trunk of a banana plant.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vīraṉ tiṇ tiṟal mārpiṉil veṇ kōṭu
ārak kutti aḻuttiya nākam
vārat taṇ kulai vāḻai maṭalcūḻ
īrat taṇṭu eṉa iṟṟaṉa ellām.