கம்பராமாயணம் 6328 · யுத்த 3.98

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வெண் கோடு இற்றன மேவலர் செய்யும்
கண்கோடல் பொறியின் கடிது ஏகி
'எண் கோடற்கு அரிது'என்ன வெகுண்டான்
திண் கோடைக் கதிரின் தெறு கண்ணான்.

பொருள் · Meaning in Tamil

வெண் கோடு இற்றன - ஐராவதத்தின் வெண்மை மிக்க தந்தங்கள் முறிந்து சிதைந்தன; மேவலர் - அதைக் கண்ட பகைவர்களான அசுரவீரர்கள்; செய்யும் கண்கோடல் பொறியின் - கண்கள் இமைத்தலைச் செய்யும் கால அளவிலே; கடிது ஏகி - விரைவாக இரணியனிடம் சென்று; எண் கோடற்கு அரிது என்ன - நீ நினைத்தபடி பிரகலாதனது வலிய உயிரைக் கவர்வது எளிதல்ல என்று கூற; திண் கோடைக் கதிரின் - வலிய கோடைக் காலத்துச் சூரியனைப் போன்று; தெறுகண்ணான் - காயும் கண்களை உடைய இரணியன்; வெகுண்டான் - மிகுந்த சினம் கொண்டான்.

கண்கோடல் பொறி - கண் இமைக்கும் கால அளவு (பொறி - அளவு). எண்- வலிமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The white tusks broke; and the enemies, swift
  2. as the instant it takes an eye to blink, went off and said,
  3. "His life is hard to take, as you intended." At that he raged —
  4. he whose eyes burned like the fierce summer sun.

What the poem says

The demon soldiers rush back to Iraṇiyaṉ in the blink of an eye to tell him that the boy cannot be killed as he had planned. The king's anger is shown through his eyes, which scorch like the midsummer sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'veṇ kōṭu iṟṟaṉa mēvalar ceyyum
kaṇ kōṭal poṟiyiṉ kaṭitu ēka
'eṇ kōṭaṟku aritu' eṉṉa vekuṇṭāṉ
tiṇ kōṭaik katiriṉ teṟu kaṇṇāṉ.