கம்பராமாயணம் 6329 · யுத்த 3.99

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'தள்ளத் தக்கு இல் பெருஞ் சயிலத்தோடு
எள்ளக் கட்டி எடுத்து விசித்து
கள்ளத்து இங்கு இவனைக் கரை காணா
வெள்ளத்து உய்த்திடுவீர்" என விட்டான்.

பொருள் · Meaning in Tamil

கள்ளத்து இங்கு இவனை - கோபம் கொண்ட இரணியன் வீரர்களை நோக்கி வஞ்சகனான இவனை (பிரகலாதனை); தள்ளத்தக்கு இல் பெரும் சயிலத்தோடு - எவராலும் அசைக்க இயலாத பெரியதொரு மலையுடன்; எள்ளக் கட்டி - பார்த்தவர்கள் ஏளனம் செய்யும்படி சேர்த்துக்கட்டி; எடுத்து விசித்து - நன்றாகப் பிணித்து; கரை காணா வெள்ளத்து - கரைகாணமுடியாத கடலிலே; உய்த்திடுமின் - தள்ளி விடுங்கள்; என விட்டான் - என்று கூறி அனுப்பிவிட்டான்.

சயிலம் - மலை. விசித்து - பிணித்து (கட்டி). வெள்ளம் - கடல். உய்த்தல் - தள்ளுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Bind him fast to a huge mountain that none can move,
  2. so that all may mock him; lift him and tie him tight,
  3. and this deceiver here — into the flood
  4. that has no shore, cast him!" he said, and sent them off.

What the poem says

Iraṇiyaṉ devises a new death: Pirakalātaṉ, whom he calls a deceiver, is to be tied to an immovable mountain and thrown into the boundless sea. The binding is meant also to humiliate the boy in front of onlookers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'taḷḷat takku il peruñ cayilattōṭu
eḷḷak kaṭṭi eṭuttu vicittu
kaḷḷattu iṅku ivaṉaik karai kāṇā
veḷḷattu uyttiṭumiṉ" eṉa viṭṭāṉ.