கம்பராமாயணம் 6330 · யுத்த 3.100

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எந்தாய் - எந்தையே; ஓட்டிக் கொல்ல - (பிரகலாதனைக் கொன்றே தீர்வது எனச்) சபதம் செய்து கொல்ல; உணர்ந்து வெகுண்டான் - (பலவிதத்தில் அவன் தப்பியதை) உணர்ந்து சினந்தெழுந்தான்; விட்டிட்டான் அலன் - தன் மகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடவில்லை; என்று விரைந்தார் - என்று நினைத்த வீரர்கள் விரைவாகச் சென்றார்கள்; கல்லொடு கட்டி - பிரகலாதனைக் கல்லோடு சேர்த்துக் கட்டி; கால்விசையின் போய் - காற்றுப் போல் வேகமாகப் போய்; கடலின் நடு இட்டிட்டார் - கடலில் நடுவே தள்ளிவிட்டார்.

எந்தாய் என இராவணனை வீடணன் விளித்துப் பிரகலாதன் கதையைத் தொடர்கிறான். ஓட்டுதல் - சூளுரைத்தல் (சபதம் செய்தல்). கால் - காற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He has sworn to kill him, and knows he has escaped, and rages;
  2. he has not let it go," they said, and hurried;
  3. they bound him to the rock, went swift as the wind,
  4. and threw him into the middle of the ocean, my father!"

What the poem says

The soldiers, seeing that the king has vowed to kill his son and will not give up, act quickly. They tie the boy to the rock, speed like the wind to the sea and drop him in its depths. Vīṭaṇaṉ addresses Irāvaṇaṉ as "my father," a respectful form for an elder brother, as he carries on with the story.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ōṭṭik kolla uṇarntu vekuṇṭāṉ;
viṭṭiṭṭāṉ alaṉ" eṉṟu viraintār
kaṭṭik kalloṭu kāl vicaiyiṉ pōy
iṭṭiṭṭār kaṭaliṉ naṭu entāy!’