கம்பராமாயணம் 6331 · யுத்த 3.101

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆதலின் வேலை
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.

பொருள் · Meaning in Tamil

நடு ஒக்கும் தனி நாயகன் - எவ்வுயிர்க்கும் நடுவாய் நின்று அருள் சுரக்கும் இறைவனாகிய திருமாலின்; நாமம் விடுகிற்கின்றிலன் ஆகலின் - திருநாமத்தைத் தியானிப்பதை பிரகலாதன் விடவில்லை ஆதலால், வேலை மடு ஒத்து - அந்தப் பெருங்கடல் ஒரு சிறிய மடுவை ஒத்ததாய், குன்றம் - அவனைச் சேர்த்துக் கட்டிய அந்த மலை; அங்கு அதின் வங்கமும் அன்றாய் - அக்கடலில் செல்லும் மாக்கலம் என்பதற்கும் போதாததாய்; குடுவைத் தன்மையது ஆயது - ஒரு சுரைக் குடுவையின்தன்மை உடையதாய் ஆனது.

நடு ஒக்கும் - நடு நிலை நிற்கும். தனி நாயகன் - ஒப்பற்ற தலைவன். மடு - குட்டை. வங்கம் - மரக்கலம். குடுவை - சுரைக்குடுக்கை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because he did not let go of the name of the peerless Lord
  2. who stands impartial to all, the ocean
  3. became like a small pond, and the mountain, not even
  4. as big as a ship upon it, became like a gourd.

What the poem says

Since Pirakalātaṉ keeps repeating the name of Tirumāl, the Lord who is equally present in every being, the vast sea shrinks to the size of a pool. The mountain tied to him, far from sinking him, becomes as light as a dried gourd, the float people use to swim.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'naṭu okkum taṉi nāyakaṉ nāmam
viṭukiṟkiṉṟilaṉ ākaliṉ vēlai
maṭu ottu aṅku atiṉ vaṅkamum aṉṟāy
kuṭuvait taṉmaiyatu āyatu kuṉṟam.