கம்பராமாயணம் 6332 · யுத்த 3.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறை ஒல்லை உணர்ந்தான் - எல்லா மறைகளையும் விரைந்து ஓதாதுணர்ந்தவனான பிரகலாதன்; திரை மோதுற்று ஆர் வேலையில் மூழ்கான் - அலைகள் மோதுகின்ற அப்பெருங்கடலில் மூழ்காதவனாய்; மீதுற்று ஆர் சிலைமீது - மேலே பொருந்திய கல்லின்மீது; கிடந்தான் - மிதந்து கிடந்தான்; ஆதிப்பண்ணவன் - உலகுக்கு ஆதி மூர்த்தியாகிய திருமாலின்; ஆயிரம் நாமம் ஓதுற்றான் - ஆயிரம் திருநாமங்களையும் கூறித் துதிக்கலானான்.
மறை உணர்ந்தான் - வேலையில் மூழ்கான் - சிலைமீது கிடந்தான் பண்ணவன் நாமம் ஓதுற்றான் என இயையும். மீதுற்று - மேலே பொருந்தி. "ஓத வேண்டுவதில்லை" என்று முன்பு (6215) ஆசிரியனிடம் கூறினான் அல்லவா? ஓதாமலே - இறைவன் திருநாமத்தைக் கூறியதன் பயனாய் எல்லா மறைகளையும் எளிதில் உணர்ந்தான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He did not sink in the sea where the waves crash and surge;
- he lay upon the rock that rose above the water,
- and recited the thousand names of the First Lord —
- he who had swiftly come to know the Vedas.
What the poem says
Floating safely on the rock, the boy chants the thousand names of Viṣṇu. Earlier he had told his teacher that he had no need to study the Vedas; now, as the fruit of speaking God's name, he has come to know all of them without study.