கம்பராமாயணம் 6333 · யுத்த 3.103

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தலையில் கொண்ட தடக் கையினான் தன்
நிலையின் தீர்வு இல் மனத்தின் நினைந்தான்;
சிலையில் தண்புனலில் சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்.

பொருள் · Meaning in Tamil

தலையில் கொண்ட தடக்கையினான் - பிரகலாதன் தலைமீது குவித்த அகன்ற கைகளை உடையவனாய்; தன் நிலையில் தீர்வுஇல் மனத்தின் - திருமாலைத் தியானிக்கின்ற தனது நிலையில் மாறாத மனத்திலே; நினைந்தான் - (அப்பரமனது திருநாமத்தையே) தியானித்தான்; சிலையில் திண்புனலில் - பெரிய கடலின்மீது கல்லிலே (மிதந்து); சினை ஆலின் இலையில் - கிளைகளை உடைய ஒரு ஆலமாமரத்து இலைமீது கிடந்த; பிள்ளை எனப் பொலிகின்றான்- சிறு பாலகனாகக் கிடந்த திருமாலைப் போல, பொலிந்து திகழ்ந்தான்.

பிரளயகாலத்திலே உலகனைத்தையும் தனது வயிற்றிலே வைத்துக் காத்து, ஒரு ஆலிலையின் மீது பாலகனாய்த்துயின்ற பரமனை உவமையாக்கிக் கடலிலே கல்லோடு மிதந்த பிரகலாதனைப் போற்றியுரைத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his broad hands joined above his head,
  2. he meditated with a mind that never left its state;
  3. on the rock, on the mighty waters, he shone
  4. like the child on the leaf of the branching banyan.

What the poem says

Pirakalātaṉ floats on the sea with his palms joined over his head, his mind fixed unwaveringly on God. The poet compares him to Viṣṇu himself, who at the dissolution of the world holds all creation in his belly and sleeps as an infant on a banyan leaf upon the flood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'talaiyil koṇṭa taṭak kaiyiṉāṉ taṉ
nilaiyiṉ tīrvu il maṉattiṉ niṉaintāṉ;
cilaiyil tiṇ puṉalil ciṉai āliṉ
ilaiyil piḷḷai eṉap polikiṉṟāṉ.