கம்பராமாயணம் 6334 · யுத்த 3.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடியாய் - தீங்கு புரியும் கொடியவர்களுக்குக் கொடியோனே!; குறியாய் - இத்தகையவன் எனக் குறிப்பிட இயலாதவனே!; குணம் ஏதுமிலாய் - குணங்கள் எதுவுமில்லாதவனே; நெடியாய் - நீண்டவனே; அடியேன் நிலை நேர்குதியோ - அடியவனாகிய எனக்கு நேராக எதிர்ப்படுவாயோ?; அடியார் அடியேன் எனும் - உனது அடியவர்களுக்கு அடியவன் என்னும்; ஆர்வம் அலால் - ஆர்வமுள்ளவன் அல்லாது; ஒடியா வலி - என்னைத் துன்புறுத்துபவர் வெல்ல இயலாத வலிமை; யான் உடையேன் உளனோ - உள்ளவனாக நான் உடையவனோ?
கூடாரை வெல்லும் சீர்மை உடையவன். கொடியவருக்குக் கொடியவன் என்பதால் 'கொடியாய்' என்றான். 'குறியாய்' என்றது எவராலும் இத்தகையன் எனக் குறிப்பிட இயலாதவன், என்று பொருள் உடையது. வாமனனாக வந்து உலகைக் காத்தவன் என்பதாலும் 'குறியாய்' என்றான் எனலும் பொருந்தும். (இப்பொருள் பிரகலாதன் கூற்றில் பொருந்தாமையை 6220 ஆம் பாடல் உரைக்குறிப்பால் அறிக.) நல்ல குணங்களுக்கெல்லாம் உறைவிடமான “குணபூரணன்” என்பதால் தீயகுணம் சிறிது மில்லாதவன் என்பதை 'குணமேதுமிலாய்' என்பதுணர்த்தும்; 'குணமிலி' என இறைவனைக் குறிப்பதும் உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Apart from the longing to call myself a servant of your servants,
- do I have any strength that cannot be broken?
- O cruel one! O one beyond all marking! O one with no fault in you!
- O towering one! Will you come face to face with this servant in his plight?
What the poem says
Floating on the sea, Pirakalātaṉ prays to Tirumāl. He has no strength of his own, only the wish to serve God's servants. The titles he uses carry layered meanings: God is "cruel" only to the cruel; "beyond marking" means no one can say what he is like, though it may also recall the dwarf Vāmaṉaṉ; "with no qualities" means with no evil quality, since he is full of every good one. "Towering" recalls the dwarf who grew to span the worlds.