கம்பராமாயணம் 6335 · யுத்த 3.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெள்ளம் தரும் இன்னமுதே - பாற்கடல் தரும் இனிய அமுதம் போன்றவனே!; கள்ளம் திரிவார் - கள்ளமனத்துடன் திரிபவர்கள் எவரோ; அவர் கைதவம்நீ - அவருக்குப் புலப்படாது வஞ்சிப்பவன் நீ; உள்ளம் தெரியாத - மனத்துக்குப் புலனாகாதவை; உனக்கு உளவோ - உனக்கு எவையேனும் உள்ளனவாமோ?; துள்ளும் பொறியின் நிலை - ஒரு நிலையின்றித் துள்ளித் திரியும் ஐம்பொறிகளின் நிலைமை; சோதனைதான் - உனது சோதனைதான்; விதியோ - (உனது அடியவர்களுக்கு இச்சோதனை என்பது) வழக்கமான விதிதானோ?
கள்ளமனம் கொண்டு, ஒழுக்கக் கேடர்களாகத் திரிபவர்க்குப் புலப்படாதபடி தன்னை மறைத்துக் கொள்பவன் பரமன் என்பதால் 'கள்ளம் திரிவார் அவர் கைதவம் நீ' என்றார். "உள்குவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி" என்பது திருமாலை. 'உள்ளம் தெரியாத உனக்குளவோ' என்றது 'அனைத்தும் உணர்பவன்' என்பதைக் காட்டும். அடியவர்களைச் சோதிப்பதென்பது உனக்கு வழக்கமான ஒரு விதியாகக் கொண்டாயோ என 'சோதனைதான் விதியோ' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To those who wander with deceit in their hearts, you are a hidden trick;
- is there anything the heart cannot know that is hidden from you?
- Is this testing through the restless, leaping senses
- your fixed rule, O sweet nectar given by the sea of milk?
What the poem says
The boy marvels that God hides himself from the crooked while knowing everything in every heart. He asks whether putting devotees to the test, through the unsteady senses and through suffering, is simply God's usual way. God is compared to the nectar churned from the ocean of milk.