கம்பராமாயணம் 6336 · யுத்த 3.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரு நான்முகனே முதல் வானவர் தாம் - உனது உந்திக் கமலத்தில் வந்த பிரமன் முதலான தேவர்கள் எல்லாம்; திரு நான் மறையின் - சிறந்த வேதங்கள் கூறும்; நெறியே திரிவார் - ஒழுக்க நெறி நின்று வாழ்பவராவார்; பெரு நாள் தெரிகின்றிலர் - அத்தகையோரும் நெடுங்காலமாக உன்னைத் தேடிக் காணாதவரானார்; பேதைமையேன் - பேதைமைத் தன்மை உடைய நான்; ஒரு நாள்- ஒரே நாளில்; உனை எங்ஙனம் உள்ளுவெனோ - உன்னை எவ்வாறு நினைத்துப் போற்றுவேன்.
திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றியவன் பிரமன் ஆதலின் 'வருநான்முகன்' என்றார். பிரமனும் மற்றுமுள்ள தேவர்களும் மறை நெறியில் நின்று உயர் வாழ்வு வாழும் தன்மையுடையவர்கள்; அத்தகையோரும் நெடுங்காலமாகத் தேடியும் உன்னைத் தெரிந்தவரல்லர் என்றால் சிறு மதியாளனாகிய நான் ஒரே நாளில் உன்னை உணர்ந்து நினைக்கவல்லவனோ என்பான் 'உனை எங்ஙனம் உள்ளுவெனோ' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Brahmā, who came from your navel, and the gods led by him,
- who walk only the path of the sacred four Vedas,
- have not discerned you through long ages; how could I, a simple one,
- think of you rightly in a single day?
What the poem says
Brahmā, born on the lotus that grows from Tirumāl's navel, and the other gods live by the Vedas, yet after ages of searching they have not truly known him. Pirakalātaṉ humbly asks how a small-minded boy like himself could grasp God in a day.