கம்பராமாயணம் 6338 · யுத்த 3.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயப் பெறும் நல்நெறி - ஆராய்ந்து கடைப் பிடிக்கப்படும் நல்ல நெறி; தம் அறிவு என்று - தமது அறிவுக்கு மட்டும் புலனாவதே என்று கருதி; ஏயப்பெறும் - பொருந்தி ஒழுகும்; ஈசர்கள் எண்ணிலரால் - தலைவர்களாகிய தேவர்கள் எண்ணற்றவராவர்; நீ அப்புறம் நிற்க - நீ அவர்களின் அறிவுக்கு எட்டாமல் நிற்க, நினைக்கிலர்- அதனால் உன்னை நினைக்க மாட்டாதவராயினர்; நின் மாயப் பொறி புக்கு- உனது மாய வலைக்குள்ளே புகுந்து சிக்கி; மயங்குவரால் - மயங்குபவராயினர்.
(தலைமை கொண்ட) தேவர்கள் என்பது குறிப்பு மொழி; எவ்வகையாலும் தலைமையுடையவர் என்றோ தேவர்கள் என்றோ கொள்ளத்தகாதவர் என்பது கருத்து. மாயப்பொறி - மாயவலை. பிரமன் போன்றோரும் மாயப் பொறி புக்கு மயங்கினாரன்றோ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Holding that the good path, sought by inquiry, is just their own knowledge,
- countless are the lords who cling to it;
- they never think of you, who stand beyond them; entering
- your snare of illusion, they fall into bewilderment.
What the poem says
Many beings who call themselves lords and gods trust only what their own minds can reach. Because God stands beyond that reach, they do not think of him and are caught in his net of illusion. The commentary notes that even Brahmā was once bewildered in this way, and that calling them "lords" here is ironic.