கம்பராமாயணம் 6340 · யுத்த 3.110

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'ஆதிப் பரம் ஆம் எனில் அன்று எனல் ஆய்
ஓது அப்பொருள் நூல்கள் உலப்பு இலவால்;
பேதிப்பன; நீ அவை பேர்கிலையால்;
வேதப் பொருளே! விளையாடுதியோ?

பொருள் · Meaning in Tamil

ஆதிப்பரம் ஆம் எனில் - முதற் பரம் பொருள் என்று ஒரு நூல் கூறினால்; அன்று எனலாம் - அதுபரம் பொருள் அல்ல என்று மற்றொரு நூல் கூறும்; ஓது அப்பெரு நூல்கள் - இவ்வாறு மாறுபட்டுக் கூறும் பெரிய நூல்கள்; உலப்பு இலவால் - அளவில்லாதனவாகும்; பேதிப்பன - வேறுபாடுகளைச் செய்வனவாகும்; நீ அவை பேர்கிலையால் - நீ அவற்றிலிருந்து பேர்வாயல்லை; வேதப் பொருளே - வேதங்களால் சிறப்பித்துப் பேசப்படும் பரம் பொருளே; விளையாடுதியோ - வேறுபாடுகளை வேடிக்கை பார்த்து விளையாடுகிறாயோ?

பிணக்கியாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் (6.2.8) என்ற திருவாய்மொழி ஒப்பு நோக்கத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If one book says, "This is the first Supreme," another says, "It is not";
  2. the great books that teach this are without end;
  3. they make divisions; yet you never depart from any of them;
  4. O meaning of the Vedas! Is this your play?

What the poem says

The scriptures contradict one another about who is supreme, and there is no end to their disputes. Yet God is present in all of them and is not divided by them. The boy asks whether God simply watches these quarrels as a game. The commentary compares a verse of the Tiruvāymoḻi with the same thought.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ātip param ām eṉil aṉṟu eṉalām
ōtu am peru nūlkaḷ ulappu ilavāl;
pētippaṉa; nī avai pērkilaiyāl;
vētap poruḷē! viḷaiyāṭutiyō?