கம்பராமாயணம் 6341 · யுத்த 3.111

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்போருகனார் - தாமரை மலரில் உறையும் பிரமதேவனும், அரனார் அறியார் - சிவபிரானும் கூட உன்னை அறிய மாட்டார்கள்; எம் போலியர்- (என்றால்) எம்மைப் போன்றவர்கள்; என் பலவா - பலவாறு நினைந்து பேச என்ன உள்ளது?; கொம்போடு - ஒரு மரத்தின் கிளைகளோடு; அடை, பூ கனி, காய் எனினும் - இலை, பூ, கனி, காய் என்றாலும்; மரம் ஒன்று எனும் வாசகம்- 'மரம் ஒன்று' என்று கூறுவது; வம்போ- புதுமையானதோ? (அல்ல)

அம்போருகம் - தாமரை. பலவா- பலவாறு. அடை - இலை. வம்பு - புதுமை. உலகமும் அதில் வாழும் உயிர்களும் தனித்தனியே பார்க்கும் போது வெவ்வேறாகத் தோன்றினாலும், அனைத்தும் இறைவனுக்கு உறுப்புக்களாக உள்ளன. “மேவுமுயிர் யாவுமுனை வாழுமிடமாகவுறை மேதகைமை ஓத வெளிதெனலாமோ” என்ற உரை ஒப்பிட்டுணரத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lotus-born and Araṉ do not know you;
  2. if such as we try to reckon you, what are many words worth?
  3. Though there are branches, leaves, flowers, ripe and unripe fruit,
  4. is it something new to say "It is one tree"?

What the poem says

If even Brahmā, seated on the lotus, and Civaṉ cannot know God, there is little that ordinary beings can say. The image of the tree makes the point: branches, leaves, flowers and fruit look different, yet together they are one tree. In the same way the world and all its creatures, though many, are all parts of the one God.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ampōrukaṉār araṉār aṟiyār;
em pōliyar eṇṇiṭiṉ eṉ palavā?
kompōṭu aṭai pū kaṉi kāy eṉiṉum
vampō' maram oṉṟu' eṉum vācakamē?