கம்பராமாயணம் 6342 · யுத்த 3.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகம் - சித்து, அசித்துக்களான உலகப்பொருள்கள்; நின்னின் பிறிதாய் - உன்னிலிருந்து வேறுபட்டதாய்; நிலையில் திரியா - நிலைமாறாதனவாய்; தன்னின் பிறிதாயினதாம் - தமக்குள்ளேயும் வேறுவேறாக இருப்பவையாவும்; எனினும் - அவ்வாறு இருந்தன என்றாலும்; உன்னில் பிறிதாயினவோ - உன்னிலிருந்து வேறாகவோ உள்ளன? இல்லையே; பொற்கலன் - பொன்னால் செய்த அணிகலன்கள் பலவிதமாக இருந்தாலும்; பொன்னில் பிறிது ஆகில - பொன்னைவிட்டு வேறு ஒன்றாக ஆவதில்லை.
பொன் ஆபரணங்கள் காதணி கழுத்தணி என்று பலவகைப்பட்டுக் காணப்பட்டாலும் பொன்னில் வேறாகா. அதுபோல உலகப் பொருள்கள் அனைத்தும் பலவகையினவாயினும் உன்னில் வேறானவை அல்ல, சித்தும் அசித்துமான அவை ஈசனுக்கு உடல் ஈசன் உயிர் என்ற 'சரீரசரீரி' பாவம் வைணவத்தின் சிறந்த கொள்கையாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though things seem other than you, each unchanging in its state,
- and though they are other than one another,
- is the world ever other than you?
- Golden ornaments are nothing other than gold.
What the poem says
This verse states the Vaiṣṇava teaching that the world and souls are God's body and God is their soul. Earrings and necklaces differ in shape but are all gold. In the same way, the many conscious and unconscious things of the world are not separate from God.