கம்பராமாயணம் 6345 · யுத்த 3.115

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இட்டார் கடுவல்விடம் - கடுமையான வலிய விடத்தை பிரகலாதனுக்குக் கொடுத்தார்கள்; எண்ணுடையான் தொட்டான் நுகரா - இறைவனைத் தியானித்தலை உடையவனான பிரகலாதன் விடத்தை வாங்கி உண்டும்; ஒரு சோர்வு இலனால் - சிறிதும் சோர்வில்லாதவனாய் இருந்தான்; கண்கொடியோன் - அதைக் கண்ட கருணையற்ற கொடியவனான இரணியன்; கட்டு ஆர் கடு மத்திகை - முடிச்சுக்களை உடைய குதிரைச் சம்மட்டி என்னும் படைக்கலத்தை; விட்டான் - அனுப்பிவிட்டனனாக; அவன்மேல் அவர் வீசினரால் - பிரகலாதன்மீது வீரர்கள் அந்தச் சம்மட்டி வீசினர்.

எண் உடையான் - எண்ணத்தில் இறைவனை உடையவன் (மனத்திலே பரமனைத் தியானித்து இருந்தவன் பிரகலாதன்). கண் கொடியோன் - கண்ணில் சிறிதும் கண்ணோட்டம் இல்லாத கொடிய இரணியன்; கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் (275) என்ற குறளை நினைக. கட்டு - முடிச்சு. மத்திகை - குதிரைச் சம்மட்டி என்னும் ஆயுதம். விட்டான்- அனுப்பி வைத்தான். மத்திகை என்று ஒருமையில் கூறினாலும் பிரகலாதன் மீது எறிந்தவர் பலர் என்பதால் 'மத்திகைகள்' என்று கொள்வது பொருந்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They gave him a harsh and potent poison; he who held God in his thought
  2. took it and drank, and showed no faintness at all;
  3. then the cruel one, pitiless of eye, sent for
  4. knotted, cruel horsewhips, and they lashed him with them.

What the poem says

The poison has no effect on Pirakalātaṉ, whose mind is fixed on God. Iraṇiyaṉ, called "cruel of eye" because he has no kindness in his gaze, orders his men to flog the boy with knotted whips. The commentary recalls the Tirukkuṟaḷ saying that kindness is the true ornament of the eye.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṭṭār kaṭu val viṭam; eṇṇuṭaiyāṉ
toṭṭāṉ nukarā oru cōrvu ilaṉāl;
kaṭṭu ār kaṭu mattikai kaṇ koṭiyōṉ
viṭṭāṉ; avaṉmēl avar vīciṉarāl.