கம்பராமாயணம் 6346 · யுத்த 3.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெய்யார் - கொடியவர்களான அரக்கர்கள்; முடிவு இல்லவர் - எண்ணி அளவிட முடியாத பலர்; வீசிய போது - குதிரைச் சம்மட்டிகளை தன் மீது எறிந்த போது; உய்யான் - (பிரகலாதன்) தப்பிப் பிழைக்க மாட்டான்; எனும் வேலையினுள் - என்று பார்த்தவர் கூறும் சமயத்திலே; உறைவோன் - எனது உள்ளத்திலே கோயில் கொண்டிருப்பவனாகிய திருமாலுக்கு; கை ஆயிரம் அல்ல - கைகள் ஆயிரம் என்னும் அளவினதல்ல; கணக்கு இல என்று - கணக்கில்லாதனவாம் என்று அறிந்தவனாய்; எய்யா உலகு யாவையும் எண்ணினனால் - எண்ணி அறியமுடியாத எல்லா உலகங்களிலும் நிறைந்த பரமனைத் தியானித்தான்.
வேலை - நேரம். திருமால் ஆயிரம் கைகளை உடையவர் என்பதை "காலாயிரம் முடியாயிரம் ஆயிரம் கைபரப்பி, மேலாயிரம் தலைநாகம் கவிப்ப, விண்பூத்த கஞ்சம் போல் ஆயிரம்கண் வளரும் பிரான்" என்று திருவரங்கக் கலம்பகம் கூறுவதாலும் அறியலாம். எய்யாமை - அறியாமை (தொல். சொல். உரி.44) இங்கே எண்ணி எல்லை அறியமுடியாமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the cruel ones, beyond counting, rained their blows,
- at the moment all said, "He will not survive," he thought: "The one who dwells within me
- has not merely a thousand hands — they are beyond number";
- and he meditated on him who fills all the unknowable worlds.
What the poem says
As countless demons whip him and the onlookers expect his death, the boy reflects that the God in his heart has hands beyond number, more than the thousand the scriptures speak of, to shield him. The commentary cites a hymn on Śrīraṅgam that describes the Lord with a thousand feet, crowns, hands and eyes.