கம்பராமாயணம் 6348 · யுத்த 3.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வந்தானை - வெகுண்டு வந்த இரணியனை; வணங்க - பிரகலாதன் (தந்தையென்பதால்) தொழுது; எந்தாய் - எனது தந்தையே; என் மன் உயிர்தான் கொள எண்ணினையேல் - எனது நிலையான உயிரைக்கவர நீ நினைப்பாயானால், இதுதான் - இந்த எனது உயிரானது, உம்தாரியது அன்று - (நீயும் உனது வீரர்களும் ஆன) உங்கள் வழிப்பட்டதல்ல (வசப்பட்டதல்ல); உலகு யாவும் உடன் தந்தார் - எல்லா உலகங்களையும் தந்த அந்தப் பரமன்; கொள நின்றது தான் எனலும் - தான் விரும்பினால் எடுத்துக் கொள்ள இருப்பதாகும் என்று கூறியவுடன்.
'எனலும்' என்றது அடுத்த பாடலுடன் முடிவு பெறுதலால் 'குளகம்' ஆகும். தாரியது - வழிப்பட்டது. தாரி- வழி (திசைச் சொல்லாகும்). தாரி - வழி என்ற பொருளில் தெலுங்கில் வழங்குவது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he came, the boy bowed to him: "If you mean to take
- my lasting life, my father, this life
- is not in your power, nor in your men's;
- it waits for Him who gave all the worlds to take it" — when he said this,
What the poem says
Pirakalātaṉ bows to his father as a son should, then calmly says that his life is not Iraṇiyaṉ's to take; it belongs to the God who made all the worlds. The sentence continues into the next verse. The commentary notes that it reads the word tāri, "way", as a regional word, still used in Telugu.