கம்பராமாயணம் 6349 · யுத்த 3.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் - இரணியன் கோபம் பொங்கி எழுந்த போதும் கொல்லாதவனாய், காட்டு மேல் காட்சி கொள்வான் - உலகு தந்தானைப் பிரகலாதன் காட்டுவானாயின் காண விரும்பினவனாய்; 'ஏவரே உலகம் தந்தார் - உலகத்தைப் படைத்தவர் யார்? என்பெயர் ஏத்திவாழும் - எனது பெயரைச் சொல்லி வணங்கி வாழுகின்ற; மூவரே - அரி, அயன், அரன் என்ற மும்மூர்த்திகளா; அல்லர் ஆகின் - அந்த மூவரும் அல்லர் என்றால், முனிவரே, முழுதும் தோற்ற தேவரே - முனிவர்களா? எனக்கு முற்றிலும் தோற்ற தேவர்களா; பிறரே யாரே தெரியச் செப்புதி - மற்றவர்களா? யார் என்று நான் அறியக் கூறுக; என்றான் - என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Who gave the world? The Three, who live
- by praising my name? If not they, the sages? The gods
- whom I utterly defeated? Others? Who? Tell me plainly!" he said;
- though his anger flared, he did not kill, wishing to see what would be shown.
What the poem says
Iraṇiyaṉ mocks the claim that someone else made the world. The Three, Brahmā, Viṣṇu and Civaṉ, and the sages and gods all live, he says, by praising him. Still, his curiosity holds back his anger for a moment: he wants to see this creator if the boy can show him.