கம்பராமாயணம் 6350 · யுத்த 3.120

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'உலகு தந்தானும், பல்வேறு உயிர்கள் தந்தானும், உள் உற்று,
உலைவு இலா உயிர்கள் தோறும் அங்கு அங்கே உறைகின்றானும்,
மலரினில் வெறியும் எள்ளில் எண்ணெயும் மான, எங்கும்
அலகு இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரிகாண் அத்தா

பொருள் · Meaning in Tamil

அத்தா - (பிரகலாதன் இரணியனை நோக்கி) தந்தையே!; உலகுதந்தானும் - எல்லா உலகங்களையும் படைத்தளித்தவனும்; பல்வேறு உயிர்கள் தந்தானும் - இந்த உலகில் வாழுகின்ற பல்வேறு வகையான உயிர்களைப் படைத்தவனும்; உலைவுஇலா உயிர்கள் தோறும் உள்உற்று - அழிவற்ற அவ்வுயிர்கள் தோறும் உள்ளே பொருந்தி; அங்கங்கே உறைகின்றானும் - ஆங்காங்கு நிறைந்திருப்பவனும்; மலரினில் வெறியும் - மலரிலே நிறைந்த மணமும்; எள்ளில் எண்ணெயும் - எள்ளுக்குள் நிறைந்த எண்ணெயும் போல்; அலகில் பல் பொருளும் பற்றி - அளவிட முடியாத பலபொருள்களையும் தன்னிடம் கொண்டு; முற்றிய அரி காண் - எங்கும் நீக்கமின்றி நிறைந்திருப்பவன் அந்தத் திருமாலே; மற்றும் கேளாய் - மேலும் கேட்பாயாக.

உள்உற்று - உள்ளே பொருந்தி (அந்தர் யாமியாய்). அங்கங்கே உறைதல் - எங்கும் நீக்கமின்றி நிறைந்திருத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who gave the world, who gave the countless kinds of creatures, who entering within
  2. dwells here and there in every undying soul,
  3. like fragrance in the flower and oil in the sesame — and hear more —
  4. it is Ari who holds all things beyond count and fills them all, father.

What the poem says

The boy answers that the creator is Ari, that is Tirumāl. He made the world and all beings and lives inside every soul as its inner controller. He fills everything as scent fills a flower and oil fills a sesame seed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ulaku tantāṉum, pal vēṟu uyirkaḷ tantāṉum, uḷ uṟṟu,
ulaivu ilā uyirkaḷtōṟum aṅku aṅkē uṟaikiṉṟāṉum,
malariṉil veṟiyum eḷḷil eṇṇeyum maṟṟum, kēḷāy
alaku il pal poruḷum paṟṟi muṟṟiya arikāṇ attā