கம்பராமாயணம் 6351 · யுத்த 3.121

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'என்கணால் நோக்கிக் காணாய், எங்கணும் உளன்காண், எந்தை!
உன்கண் நான் அன்பிற் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய்;
நின் கணால் நோக்கிக் காண்டற்கு எளியனோ? நினக்குப் பின்னோன்
பொன் கணான் ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்.

பொருள் · Meaning in Tamil

எந்தை - எனது தந்தையே; உன்கண்நான் அன்பின் சொன்னால் - உன்னிடம் கொண்டுள்ள அன்பினால் நான் எடுத்துச் சொன்னால்; உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் - நான் சொல்வது உறுதியளிப்பது என்று ஒன்றும் மனத்தில் கொள்ளமாட்டாய்; நினக்குப்பின்னோன்- உனக்குப் பின் பிறந்த தம்பியான; பொற்கண்ணன் ஆவியுண்ட - இரணியாட்சன் உயிரையுண்ட, புண்டரீகக் கண் எம்மான் - தாமரைபோன்ற கண்களை உடைய எம்பெருமான்; நின் கணால் நோக்கிக் காண்டற்கு எளியனோ - உனது கண்களினால் நீ பார்த்து அறியுமளவுக்கு எளியவனோ; என் கணால் நோக்கிக் காண்டற்கு எங்கணும் உளன்காண் - எனது கண்களால் கண்டு அறிவதற்கு அப்பரமன் எங்கும் இருக்கிறான் என்பதை உணர்வாயாக.

'பொற்கண்ணன்' என்பது இரணியாட்சன் என்பதன் தமிழாக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To be seen with my eyes, he is everywhere, my father!
  2. When I tell you out of love, you take none of it as truth;
  3. is he so easy to see with your eyes —
  4. the lotus-eyed Lord who took the life of Golden-Eye, your younger brother?

What the poem says

Pirakalātaṉ says that to his eyes God is everywhere, but his father will never see him. He reminds Iraṇiyaṉ that this same lotus-eyed Lord killed his younger brother Iraṇiyāṭcaṉ, whose name means Golden-Eye. Iraṇiyaṉ's hatred of Tirumāl comes from that killing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉ kaṇāl nōkkik kāṇṭaṟku, eṅkaṇum uḷaṉkāṇ, entai!
uṉkaṇ nāṉ aṉpiṉ coṉṉāl uṟuti eṉṟu oṉṟum koḷḷāy;
niṉkaṇāl nōkkik kāṇṭaṟku eḷiyaṉō? niṉakkup piṉṉōṉ
poṉkaṇāṉ āvi uṇṭa puṇṭarīkak kaṇ ammāṉ.