கம்பராமாயணம் 6352 · யுத்த 3.122

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூன்று அவன் குணங்கள் - சாத்வீகம், இராசதம், தமோகுணம் என்று மூன்றும் அவன் குணங்களாகும்; செய்கை மூன்று - ஆக்கல், அளித்தல், அழித்தல் என்று மூன்றும் அவன் தொழில்களாகும்; அவன் உருவம் மூன்று - அயன், அரன், அரி என்னும் மூன்றும் அவன் உருவங்களாகும்; மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று - ஒளிமிக்க சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய ஒளிப்பொருள் மூன்றும் அவனது கண்களாகும்; அவன் உலகம் மூன்று - சுவர்க்கம், மத்தியம், பாதாளம் என்னும் மூன்றும் அவனது உலகங்களாகும்; தோன்றலும் இடையும் ஈறும்- தோற்றம், இடை, இறுதியாகிய மூன்று நிலைகளை உடைய; தொடங்கிய பொருள் கட்கு எல்லாம் - எல்லாப் பொருள்களுக்கும்; சான்று அவன்- சாட்சியாய் இருப்பவன் அப்பரமனே; இதுவே வேதமுடிவு - இதுவே வேதங்களின் முடிந்த முடிபு; இது சரதம் என்றான் - இது சத்தியம் என்றான்.

எங்கும் உள்ள, எல்லாம் வல்ல, எவ்வுயிர்க்கும் ஈசனாகிய பெருமானுடைய இயல்பை எடுத்துரைக்கும் பாட்டு இது. முக்குணம், முத்தொழில், மூவுருவம், மூன்றுலகம், மூன்றுகண்கள் - உயிர்களின் மூன்றுநிலை கூறுவது கருதத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Three are his qualities; three his works; three his forms;
  2. three his eyes, the three blazing lights; three his worlds;
  3. of all things that have beginning, middle and end
  4. he is the witness; this is the end of the Veda; this is truth," he said.

What the poem says

The boy describes God's nature in threes. His three qualities are goodness, passion and dullness. His three works are creating, sustaining and destroying, and his three forms are Brahmā, Civaṉ and Ari. His three eyes are the sun, the moon and fire, and his three worlds are heaven, earth and the underworld. He witnesses the beginning, middle and end of everything. This, the boy declares, is the final teaching of the Vedas.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'mūṉṟu avaṉ kuṇaṅkaḷ; ceykai mūṉṟu; avaṉ uruvam mūṉṟu;
mūṉṟu kaṇ, cuṭar koḷ cōti mūṉṟu; avaṉ ulakam mūṉṟu;
tōṉṟalum iṭaiyum īṟum toṭaṅkiya poruḷkaṭku ellām
cāṉṟu avaṉ; ituvē vēta muṭivu: itu caratam'' eṉṟāṉ.