கம்பராமாயணம் 6353 · யுத்த 3.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்றலும் - என்றெல்லாம் இறைவன் இயல்பை பிரகலாதன் கூறலும்; அவுணர் வேந்தன் - அதுகேட்ட அசுரர் வேந்தனான இரணியன்; எயிற்றரும்பு இலங்க நக்கான் - அரும்பு போன்ற பற்கள் ஒளிரச் சிரித்தான்; (பின் பிரகலாதனை நோக்கி) ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் - வெவ்வேறு வகைப்பட்ட எல்லாப் பொருள்களிலும்; ஒருவன் புக்கு உறைவன் என்றாய் - ஒருவனாகிய அவன் புகுந்து தங்கி உறைகிறான் என்றாய்; நன்று, அது கண்டு - நல்லது, முதலில் அதைப் பார்த்துவிட்டு; பின்னர் நல்லவாபுரிதும் - பின்பு அதற்கேற்ற நல்ல செயல்செய்வோம்; கள்வன் தூணில் நின்றுளன் என்னின் - அந்த வஞ்சகன் (எங்கு முளன் என்றாயே) இந்தத் தூணில் உளன் என்றால்; நிலைமை நிரப்புதி- அவன் எங்கும் நிறைந்துள்ள நிலை எனக்குப் புலப்படும்படி நிறைவு செய்வாயாக என்றான்.
எயிற்றரும்பு- உருவகம். ஒன்றல் இல் பொருள் - ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத வெவ்வேறு பொருள்கள். நல்லவா - நல்லவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At this the demon king laughed, his bud-like teeth gleaming:
- "You say one being enters and dwells in all things, unlike as they are;
- good — I shall see that first, and then do what is fitting; if in this pillar
- that thief stands, make good your claim," he said.
What the poem says
Iraṇiyaṉ laughs, his teeth flashing like buds, and takes up the challenge. If God truly lives in everything, then let the boy prove that this "thief" is inside the pillar in front of them. This sets up the appearance of Narasiṃha, the Man-Lion.