கம்பராமாயணம் 6354 · யுத்த 3.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சாணினும் உளன் - ஒரு சாண் அளவுடைய பொருளிலும் இருப்பான்; ஓர்தன்மை அணுவினை - பிரிக்க வியலாதபடி ஒன்று பட்டதன்மை ஒரு அணுவை, சத கூறிட்ட கோணினும் உளன் - நூறு பகுதிகளாகப் பிரித்த ஒரு பகுதியிலும் இருப்பான்; மா மேருக் குன்றிலும் உளன் - மிகப் பெரிய மேரு மலையிலும் இருப்பான்; இந்நின்ற தூணினும் உளன் - இங்கு நின்ற இந்தத் தூணிலும் இருப்பான்; நீ சொன்ன சொல்லினும் உளன் - நீ இப்போது சொன்ன இந்தச் சொல்லிலும் இருப்பான்; இத்தன்மை - (அப்பெருமானுடைய எங்கும் நிறைந்திருக்கும்) இந்தத் தன்மையை; விரைவின் காணுதி என்றான் - விரைவிலே காண்பாய் என்று பிரகலாதன் கூறினான்; நன்று எனக் கனகன் நக்கான் - நல்லது என்று கூறி இரணியன் (ஏளனமாக) சிரித்தான்.
சாண் ஆகு பெயராய் அவ்வளவுடைய பொருளைக் குறித்து நின்றது. சத கூறு - நூறு கூறுகள். கோண்- நூற்றில் ஒரு பகுதி. "பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன், பரந்த அண்டமிதென நிலவிசும் பொழிவற, கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே"
பரமனின் எங்கும் நிறைந்திருக்கும் இயல்பினை இத் திருவாய் மொழியாலும் அறியலாம் (1.1.10)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He is in a thing a span long; he is in the hundredth part
- of a single, indivisible atom split a hundred ways; he is in the great mountain Mēru; in this standing
- pillar he is; in the very word you spoke he is; this nature of his
- you shall soon see," he said; "Good," said Kaṉakaṉ, laughing.
What the poem says
Pirakalātaṉ answers his father's challenge. God is in the smallest things, even in a hundredth part of an atom, and in the largest, the mountain Mēru. He is in this pillar, and even in the mocking words Iraṇiyaṉ has just spoken. Kaṉakaṉ, "the golden one", another name for Iraṇiyaṉ, accepts with scorn. The commentary compares a verse of the Tiruvāymoḻi on God's presence everywhere.