கம்பராமாயணம் 6355 · யுத்த 3.125

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டாய் ஆகில்,
கும்பத்திண் கரியைக் கோள்மாக் கொன்றென, நின்னைக் கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்''என்றான்.

பொருள் · Meaning in Tamil

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து - தேவர்களுக்கும், உனக்கும் மட்டும் மனம் ஒத்த நிலையிலே; இவ்வுலகு எங்கும் பரந்துளானை - இந்த உலகமெங்கும் வியாபித்து இருப்பவனான அத்திருமாலை; கம்பத்தின் வழியே காண - நான் இந்தத் தூணில் காணும்படி; காட்டுதி - எனக்கு நீ காட்டுவாயாக; காட்டிடாயேல்- அவ்வாறு காட்ட மாட்டாயென்றால்; கும்பத்தின் கரியை - மத்தகத்தை உடைய யானையை; கோள் மா கொன்றென - வலியசிங்கம் கொல்வது போல்; நின்னைக் கொன்று - உன்னை உடனே கொன்று; உன் செம்பு ஒத்த குருதி தேக்கி - உனது செம்பு போன்ற சிவந்த நிறம் உடைய இரத்தத்தைக் குடித்து; உடலையும் தின்பேன் என்றான் - உனது உடலையும் தின்பேன்.

கம்பம் - தூண். கும்பம் - மத்தகம். கோள் மா - வலியசிங்கம். செம்பு ஒத்தகுருதி - செம்பின் நிறத்தைப் போல சிவப்பு நிறமுடைய ரத்தம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Him whom you and the gods agree upon, who is spread through all this world,
  2. show him to me, to be seen here in this pillar; if you do not,
  3. as a fierce lion slays a strong elephant with domed brow, I shall slay you,
  4. drink your copper-red blood, and devour your flesh as well," he said.

What the poem says

Iraṇiyaṉ repeats his demand: let the boy show God inside the pillar. If he cannot, Iraṇiyaṉ will kill him the way a lion kills an elephant, drink his blood and eat his body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'umparkkum uṉakkum ottu, iv ulaku eṅkum parantuḷāṉai,
kampattiṉ vaḻiyē kāṇa, kāṭṭuti; kāṭṭiṭāyēl,
kumpat tiṇkariyaik kōḷ māk koṉṟeṉa, niṉṉaikkoṉṟu uṉ
cempu otta kuruti tēkki, uṭalaiyum tiṉpeṉeṉṟāṉ''.