கம்பராமாயணம் 6356 · யுத்த 3.126
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறிவின் மிக்கான் - மெய்யறிவாகிய ஞானத்தில் மேம்பட்டவனாகிய பிரகலாதன்; நின்னால் கோறற்கு - (இரணியனை நோக்கி) உன்னால் கொல்லப்படுவதற்கு; என்னுயிர் எளியதொன்று அன்று - எனது உயிர் ஒன்றும் அத்தனை எளிமையான தொன்றல்ல; யான் முன் சொன்னவன் - என்னால் முன்பே சொல்லப்பட்ட அந்தப் பெருமான்; தொட்ட தொட்ட இடம் தொறும்- நீ தொட்டுக் காட்டும் இடம் தோறும்; தோன்றான் ஆயின்- வெளிப்பட மாட்டான் என்றால்; என் உயிர் யானே மாய்ப்பல் - எனது உயிரை நானே மாய்த்துக் கொள்வேன்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் - அதற்குப் பிறகும் உயிர் வாழ்வதை விரும்புவேனாயின்; அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் - அந்தத் திருமாலுக்குரிய நல்ல தொண்டனாக மாட்டேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "My life is no easy thing for you to take; if He of whom I spoke
- does not appear in every place that you touch,
- I will end my life myself; and if I should wish to live on after that,
- I am no servant of His," said he who excelled in wisdom.
What the poem says
The boy stakes everything on his faith. If God does not appear wherever his father touches, he will take his own life, and if he still wanted to live after that, he would no longer be God's devotee.