கம்பராமாயணம் 6357 · யுத்த 3.127

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நசை திறந்து இலங்கப்பொங்கி - இறைவனைக் காணலாம் என்ற விருப்பம் உள்ளத்தே மிகுந்து பொங்க; நன்று நன்று என்ன நக்கு - நல்லது நல்லது என ஏளனமாகச் சிரித்து; விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன - மிகுந்த வேகத்துடன் இடி யேறு வீழ்ந்தது போல; ஓர்தூணின் - ஒரு தூணின் மீது; வென்றி இசை திறந்து உயர்ந்தகையால் - வெற்றிப்புகழ்சிறந்த உயர்ந்தகையால்; எற்றினான் - இரணியன் அறைந்தான்; எற்றலோடும்- அவ்வாறு அவன் அறைந்த உடனே; திசைதிறந்து - திசைகளைப் பிளந்து; அண்டம் கீற - அண்டம் பிளந்து கிழியுமாறு; அச்செங்கண் சீயம் - (அந்தத் திருமாலாகிய) நரசிங்கம்; சிரித்தது - பெருஞ்சிரிப்புச் சிரித்தது.

நசை- விருப்பம். வென்றிஇசை- வெற்றிப்புகழ். தனக்கு எதிரே தோன்றத் தூணில் பார்க்கலாமே என்பது அவன் ஆசை. செங்கண் சீயம் - சிவந்த கண்களை உடைய சிங்கம் - மனித உடலும் சிங்கத்தலையும் உடைய நரசிங்க மூர்த்தியைத்தான் 'செங்கண்சீயம்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Desire leaping up and swelling in him, he laughed, "Good, good!"
  2. and as a thunderbolt falls in its full force, on a pillar
  3. he struck with his lifted hand, renowned for victories; at that very blow,
  4. splitting the directions and rending the cosmos, laughed that red-eyed Lion.

What the poem says

Eager to see his enemy appear, Iraṇiyaṉ laughs scornfully and strikes the pillar like a falling thunderbolt. At once a laugh bursts out from it, loud enough to split the quarters of the sky and tear the universe. It is the red-eyed Narasiṃha, Tirumāl in the form of a man with a lion's head.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nacai tiṟantu ilaṅkap poṅki, "naṉṟu, naṉṟu" eṉṉa nakku,
vicai tiṟantu urumu vīḻntateṉṉa ōr tūṇiṉ, veṉṟi
icai tiṟantu uyarnta kaiyāl eṟṟiṉāṉ; eṟṟalōṭum,
ticai tiṟantu aṇṭam kīṟac cirittatu, ac ceṅ kaṇ cīyam.