கம்பராமாயணம் 6359 · யுத்த 3.129
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேர்அடாநின்ற தாளோடு - புகழ்பொருந்திய கால்களால்; உலகு எலாம் பெயர்ப் பேர்வான்- உலக மெல்லாம் பெயரும்படி பெயர்வானாகிய இரணியன்; ஆரடா சிரித்தாய் - (சிரிப்பொலி கேட்டு) தூணில் இருந்து சிரித்தவன் யாரடா?; சொன்ன அரிகொலோ - இச்சிறுவன் சொன்ன அரிதானோ?; அஞ்சிப்புக்க நீர் அடா போதாது என்று - எனக்குப் பயந்து போய் ஒளிந்து கொண்டிருந்த கடல் போதாதென்று; நெடும் தறி நேடினாயோ - இந்தப் பெரிய தூணையும் ஒளிந்து கொள்ளத் தேடினாயோ?; போர் அடா பொருதி ஆயின் - என்னுடன் போர் செய்ய முற்படுவாயாயின்; புறப்படு புறப்படு என்றான் - விரைவில் புறப்பட்டு வா என்றான்.
அடா- ஏடா என்பதன் மரூஉ. தறி- தூண். அடா நின்றதாள் என்பதற்கு பொருந்தி நிற்கக் காரணமான வலிமையுடன் என்பதும் பொருந்தும். தாள்- வலிமை. புறப்படு புறப்படு - விரைவு பற்றி வந்த அடுக்கு. பேர்வான் - போரிடப் பெயர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Who laughed there, you? Is it the Ari he spoke of? The sea you crept into in fear,
- you there, was not enough, so you sought out this tall post?
- If you would fight, you there, come out! Come out!" he cried,
- striding so that all the worlds shifted beneath his mighty feet.
What the poem says
Iraṇiyaṉ shouts at the voice in the pillar. He taunts Tirumāl as a coward who once hid in the ocean for fear of him and now hides in a post. He challenges him to come out and fight, and stamps forward so hard that the worlds move.