கம்பராமாயணம் 6360 · யுத்த 3.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிளந்தது தூணும் - (இரணியன் திருமாலைப் போருக்கு அழைத்தவுடன் அந்தத் தூண் இரண்டாகப் பிளந்தது; ஆங்கே பிறந்தது சீயம் - அங்கே நரசிங்கம் தோன்றியது; பின்னை வளர்ந்தது - பின்பு உடனே வளர்ந்தது; திசைகள் எட்டும் - எட்டுத் திசைகளையும்; பகிரண்டம் முதலமற்றும் அளந்தது - பேரண்டம் முதலிய அனைத்தையும் அளந்தது; அப்புறத்துச் செய்கை - அதற்கப்பாலும் வளர்ந்த செய்கையை; யார் அறிந்து அறையகிற்பார் - யார்தான் அறிந்து சொல்வதற்கு வல்லவர்; கிளர்ந்தது - மேலும் ஓங்கி வளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும் - (அதனால்) உலக உருண்டையாகிய முட்டை கீழேயும் கிழிந்தது மேலேயும் கிழிந்தது.
சீயம் - சிங்கம். செய்கை - செயல். ககனம் - உலகம். அறையகிற்பார் - கூறவல்லார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The pillar split; there the Lion was born; then
- it grew; the eight directions, the outer shell of the cosmos and all else
- it measured; what it did beyond that, who could know and tell?
- It surged up; the egg of the sky was torn, below and above.
What the poem says
The pillar breaks in two and the Man-Lion appears, growing at once to fill the eight directions and the whole universe. No one can say how far beyond that he reached. The cosmic egg itself splits open above and below.