கம்பராமாயணம் 6361 · யுத்த 3.131

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மன்றல் அம் துளபம் மாலை மானிட மடங்கல், வானில்
சென்றது தெரிதல் தேற்றாம்; சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின், அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன்
அன்று அவன் உந்தி வந்தானாம் எனத் தோன்றினானால்

பொருள் · Meaning in Tamil

மன்றல் அம் துளப மாலை - மணம் கமழும் அழகிய துழாய் மாலை அணிந்த; மானுடமடங்கல் - நரசிங்கமாகிய திருமால்; வானில் சென்றது - ஆகாயத்தே வளர்ந்து சென்றதனை இவ்வளவென்று; தெரிதல் தேற்றாம் - தெரிந்து தெளியமாட்டோம்; சேவடி படியில் தீண்ட - செம்மையான திருவடிகள் நிலத்திலே தீண்ட; நின்றது ஒர் பொழுதின் - நின்ற அந்தச் சமயத்திலே; அண்ட நெடு முகட்டிருந்த முன்னோன் - அண்டத்தின் உயர்ந்த சிகரத்திலே (சத்திய லோகத்திலே) இருந்த பிரமதேவன்; அன்று அவன் உந்தி வந்தானாம் என - (பிரமனைத் தோற்றுவித்த) அந்த நாளிலே அப்பெருமானது நாபியில் வந்தானெனும்படி; தோன்றினான் - காணப்பட்டான்.

மன்றல் - மணம். மடங்கல் - சிங்கம். தேற்றாம்- தெளியோம். படி - நிலம். முன்னோன் - பிரம தேவன். வானுற ஓங்கி வளர்ந்த நரசிங்கத்தின் உந்தி சத்தியலோகம் அளவும் உயர்ந்திருந்தமையால் பிரமன் உந்தியில் தோன்றியது போலக் காணப்பட்டான் என்பது குறிப்பு. தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Man-Lion wearing the fragrant, lovely tulasi garland — how far
  2. he rose into the sky we cannot make out; when his red feet touched the ground
  3. and he stood there a moment, the Ancient One who sat at the high summit of the cosmos
  4. seemed as though he had come forth from his navel, as on that first day.

What the poem says

The Man-Lion is so vast that his navel reaches the highest world, Brahmā's realm. Brahmā, who sits there, seems to be springing from God's navel again, as he did at creation. The commentary calls this a fanciful attribution of cause: the poet imagines a reason for something that is simply so.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṉṟal am tuḷapa mālai māṉuṭa maṭaṅkal, vāṉil
ceṉṟatu terital tēṟṟām; cēvaṭi paṭiyil tīṇṭa
niṉṟatu ōr poḻutiṉ, aṇṭa neṭu mukaṭṭu irunta muṉṉōṉ
aṉṟu avaṉ unti vantāṉām eṉat tōṉṟiṉāṉāl