கம்பராமாயணம் 6362 · யுத்த 3.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எத்துணை போதும் கை என்று இயம்பினால் - கைகள் எத்தனை உள்ளன எனக் கூறத் தொடங்கினால்; எண்ணற்கு ஏற்ற வித்தகர் உளரோ - எண்ணுவதற்குத் தகுதியான வித்தகர் யாரேனும் உள்ளனரோ?; அந்தத் தானவர் விரிந்த சேனை - அந்த இரணியனுடைய அரக்கரின் பரந்த படை; பத்து நூறு அமைந்த கோடி - ஆயிரம் கோடி அளவுடைய; வெள்ளத்தால் பகுதி செய்த - வெள்ளத்தால் பகுதி செய்யப்பட்ட; அத்தனைகடலும் மாள - அத்தனை சேனைக் கடலும் அழியும்படி; தனித்தனி அள்ளிக் கொண்ட - தனித்தனியாக அள்ளி எடுத்துக் கொண்டன (அக்கைகள்).
கை எத்துணை போதும் - கைகள் எந்த அளவுக்குப் போகும்? பத்து நூறு கோடி - ஆயிரம் கோடி. கடல் - சேனைக்கடல்; உருவகம். "ஆயிரம் விரித்த கைம்மாயமள்ள, நூறாயிரங்கை ஆற்றி கடவுள், அனைத்து மல்ல பல அடுக்கல் ஆம்பல், இனைத்தென எண்வரம் பறியாயாக்கையை" என்று பரிபாடல் (வரி 42 - 45) கூறுவதனாலும் பெருமான் ஆயிரம் கையுடையான் என்பதை அறியலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If one should ask, "How far do his hands reach?", is there
- a wise one able to count them? That demon army spread wide,
- reckoned in floods of ten hundred crores —
- those hands scooped up the whole of that sea, each on its own, until it perished.
What the poem says
The Man-Lion's hands cannot be counted. Iraṇiyaṉ's army, numbered in thousands of crores and pictured as an ocean, is scooped up handful by handful and destroyed. The commentary cites the Paripāṭal for the Lord's thousand, even countless, arms.