கம்பராமாயணம் 6363 · யுத்த 3.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயிரம் கோடி வெள்ளத்து - ஆயிரம் கோடி வெள்ளம் என்ற அளவினரான; அயில் எயிற்று அவுணர்க்கு - வேல் போன்ற பற்களை உடைய அந்த அரக்கர்களுக்கெல்லாம்; அங்கு அங்கு ஒருவர்க்கு ஒர் ஓர் திருமுகம் - ஆங்காங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுகமாகவும்; இரட்டிப் பொன்தோள் - இரண்டு மடங்கு தோள்களாகவும்; தீ எனக்கனலும் செங்கண் - தீயென மிளிரும் சிவந்த கண்கள்; சிரம் தொறும் மூன்றும் ஏயின - தலைதோறும் மூன்றாகவும் காணப்பட்டன; தெய்வ வாயினில் - தெய்வத்தன்மை வாய்ந்த அந்த நரசிங்கத்தின் திருவாயிலே; கடல்கள் ஏழும் மலைகளும் - ஏழு கடல்களும், ஏழுமலைகளும்; மற்றும் முற்றும் - மற்றுமுள்ள யாவையும் கொள்ளும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For the demons with spear-sharp teeth, in floods of a thousand crores,
- for each and every one, there and there, a sacred face, golden shoulders twice as many,
- and on every head three red eyes blazing like fire; and in that divine
- mouth the seven seas, the mountains, and everything else entire.
What the poem says
The Man-Lion shows a face, two shoulders and three fiery eyes for every one of the countless demons. His divine mouth holds the seven seas, the mountains and everything else, a sign that the whole world lives within him.