கம்பராமாயணம் 6366 · யுத்த 3.136

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ, கேடு? நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறம் அத்து ஒடும் தொடர்ந்திலோரை
அன்வயித்து, ஓரும் தீய அவுணர் அல்லாரை அந்நாள்
தன் வயிறு அகத்து வைத்துத் தந்தது, அச் சீயம், தாயின்.

பொருள் · Meaning in Tamil

நன்மையின் தொடர்ந்தார்க்கு - நல்ல செயல்களையே தொடர்ந்து செய்து வந்தவர்களுக்கு; கேடு உண்டோ - எதனாலும் தீங்கு நேருவதுண்டோ?; நான்முகத்தோன் ஆதி - பிரமதேவன் முதலாக; தொன்மையின் தொடர்ந்த - பழைய காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற; வாய்மை அறத்தொடும் துறந்திலோரை- வாய்மை, அறம் ஆகிய பண்புகளைவிடாத மேலோர்களை; அன்வயித்து - முறையாகச் சேர்த்து; ஓரும் தீய அவுணர் அல்லாரை - ஆராயும் தீயராகிய அரக்கர்கள் அல்லாத மற்ற நல்லவர்களை; அந்நாள் - அக்காலம் தொடங்கி; தாயின் அச்சீயம் தன் வயிற்றகத்துவைத்துத் தந்தது - தாயைப் போன்று அந்த நரசிங்க மூர்த்தி தனது வயிற்றுள்ளே வைத்துத் தந்தது.

தொடர்தல் - தொடர்ந்து செய்து வருதல். ஆதிதொன்மை - மிகப்பழங்காலம். துறந்திலோர் - விட்டு நீங்காதவர். அன் வயித்து - சேர்ந்து; பின்தொடர்ந்து பிரமன் முதலானோரைக் காத்தும், தீய அவுணரை மாய்த்தும் பரமன் உயிர்களைத் தொடர்ந்து வயிற்றில் வைத்துக் காத்த செயலைக் கூறி 'நல்லோர் கேடு அடைதலுண்டோ' என்ற பொதுப் பொருளைச் சிறப்பித்துக் கூறியதால் "வேற்றுப் பொருள்வைப்பணி" ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Can harm befall those who hold to goodness? From the Four-faced one onward,
  2. those who never forsook the truth and dharma kept since ancient days —
  3. gathering them in due order, all who were not the scheming, evil demons —
  4. that Lion, like a mother, held them within its belly and brought them forth.

What the poem says

Everyone good, from Brahmā down to all who kept truth and righteousness, is sheltered in the Man-Lion's belly as a mother shelters a child, while the evil demons are destroyed. The poet states a general truth, that no harm comes to the good, and backs it with this particular case. The commentary names this figure of speech as the support of a general statement by a specific example.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'naṉmaiyiṉ toṭarntārkku uṇṭō, kēṭu? nāṉmukattōṉ āti
toṉmaiyiṉ toṭarnta vāymai aṟattoṭum tuṟantilōrai
aṉvayittu, ōrum tīya avuṇar allārai annāḷ
taṉ vayiṟṟakattu vaittut tantatu, ac cīyam, tāyiṉ.