கம்பராமாயணம் 6368 · யுத்த 3.138

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வகிர்படத் துணிக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும்; வன்தோல்
சுகிர்படுத்து உரிக்கும்; செந்தீக் கண்களைச் சூலும்; சுற்றிப்
பகிர்படக் குடரைக் கொய்யும்; பசை அறப் பிசையும்; பல்கால்
உகிர்புரைப் புக்கோர் தம்மை உகிர்களால் உறக்கும், ஊன்றி;

பொருள் · Meaning in Tamil

வகிர்ப்படுத்து உரக்கும் - சிலர் உடல்களைப் பிளந்து கிழிக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும் - சிலரைப் பிடித்து வாய்களைப் பிளக்கும்; வன்தோல் துகிற்படுத்து உரிக்கும் - சிலரது உடல்களின் வன்மையான தோலை உரிக்கும்; செந்தீக் கண்களைச் சூலும் - தீப்பொறி பறக்கும் அரக்கர் தம் கண்களைத் தோண்டி எடுக்கும்; சுற்றிப் பகிர்ப்படக்குடரைக் கொய்யும் - சுற்றிலும் துண்டுபடுமாறு சிலர் குடல்களைக் கொய்யும்; பல்கால் பசை அறப்பிசையும் - சிலர் உடல்களை ஈரப்பசை நீங்கப் பல தடவை பிசையும், உகிர்ப்புரைபுக்கோர்தம்மை - தனது நகச் சந்துகளிலே புகுந்திருப்பவர்களை; ஊன்றி உகிர்களால் உறக்கும் - நகத்தால் ஊன்றிச் சிதைக்கும்.

வகிர்ப்படுத்து - பிளந்து. உரக்கும் - கிழிக்கும். துகிற்படுத்தல் - கசக்குதல். சூலுதல் - தோண்டி எடுத்தல். பகிர்பட - துண்டுபடும்படி. உகிர்ப்புரை- நகச் சந்துகள். உறக்குதல் - கிள்ளிக் களைதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. It splits them into strips and tears them; seizing them, it rips their mouths apart; their tough hides
  2. it flays off in shreds; it gouges out their fire-red eyes; all around
  3. it plucks their entrails into pieces; again and again it kneads them dry;
  4. and those who crept into the clefts of its nails, it presses and pinches out with its nails.

What the poem says

The slaughter continues in grim detail. The demons are torn apart, flayed, blinded and disembowelled. Even those who try to hide in the gaps between the Man-Lion's claws are pinched to death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vakirp paṭuttu urakkum; paṟṟi vāykaḷaip piḷakkum; vaṉ tōl
cukir paṭuttu urikkum; cen tīk kaṇkaḷaic cūlum; cuṟṟip
pakirp paṭak kuṭaraik koyyum; pacai aṟap picaiyum; palkāl
ukirp puraip pukkōrtammai ukirkaḷāl uṟakkum ūṉṟi;