கம்பராமாயணம் 6369 · யுத்த 3.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யானையும் தேரும், மாவும், யாவையும் - இரணியனது படையில் உள்ள யானை, தேர் குதிரை முதலிய எல்லாவற்றையும்; உயிர் இராமை ஊனொடும் தின்னும் - உயிர் இல்லாதபடி அவைகளின் உடலோடு தின்னும்; பின்னை ஒலிதிரைப் பரவை ஏழும் - பின்பு, ஓயாது ஒலிக்கும் அலைகளை உடைய ஏழுகடல்களையும், மீனொடும் குடிக்கும் - அவைகளில் வாழும் மீன்களோடு குடிக்கும்; விண்ணில் மேகத்து உருமொடும் விழுங்கும் - ஆகாயத்து மேகங்களை எல்லாம் இடியோடு சேர்த்து விழுங்கும்; தான் ஒடுங்காது - இந்த நரசிங்கம் சினம் தணிந்து அடங்காது; என்று அஞ்சி - என்று பயங்கொண்டு; தருமமும் சலித்தது - அறக்கடவுளும் மனம் சலிப்படைந்தது;
அம்மா- வியப்பிடைச் சொல். தருமம் - தரும தேவதை (அறக்கடவுள்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Elephants, chariots, horses, everything, so that no life remained,
- it devours flesh and all; then the seven seas with their roaring waves
- it drinks, fish and all; in the sky it swallows the clouds with their thunder;
- "He will not be stilled!" — fearing this, even Dharma trembled, ah!
What the poem says
The Man-Lion devours Iraṇiyaṉ's elephants, chariots and horses, drinks the seven seas with their fish, and swallows the thundering clouds. His rage seems so endless that even the god of righteousness is shaken with fear that it will never subside.