கம்பராமாயணம் 6370 · யுத்த 3.140

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலவரை ஆழிமால்வரையோடு எற்றும் - சிலரை சக்கரவாள மலைமீது எறிந்து கொல்லும், சிலவரை அண்ட கோளச்சூழ் இரும் சுவரில் தேய்க்கும் - சிலரை இவ்வண்ட கோளத்தைச் சூழ இருக்கும் பெரிய சுவரிலே தேய்த்துக் கொல்லும்; சிலவரைத் துளக்கு இல் குன்றம் ஏழினொடு எற்றிக் கொல்லும் - சிலபேரை, அசைதலில்லாத ஏழு மலைகளிலே மோதி எறிந்து கொல்லும்; சிலவரைத் தடக்கை தாக்கி எட்டுத் திக்கும் தாழ் இருள் பிழம்பில் தேய்க்கும் - சில பேரை பெரிய தனது கைகளாலே தாக்கி பெருந் திசைகளிலும் உள்ள தாழ்ந்த இருள் தொகுதியிலே தேய்த்துக் கொல்லும்.

ஆழிமால்வரை - சக்கரவாளகிரி. அண்ட கோளச் சூழ் இரும்சுவர்- அண்டப் பரப்பைச் சூழ்ந்துள்ள பெரிய புறச் சுவர். இவை புராண மரபில் வரும் கற்பனை இடங்கள். துளக்கில் குன்றம் - நிலைபெயராத ஏழு மலைகள். சிலவர் - சிலர் என்பதன் விரித்தல் விகாரம். கோளம் - உருண்டை. தாழ் இருள் - வினைத் தொகை. தடக்கை - பண்புத் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some it dashes against the great ring of mountains at the world's edge; some
  2. it grinds against the vast wall that encircles the cosmic sphere; some
  3. it kills by hurling them against the seven unshaken mountains; some,
  4. striking with its great hand, it grinds into the deep mass of darkness in all eight directions.

What the poem says

More of the demons are destroyed against the landmarks of the Purāṇic cosmos. These are the ring of mountains that bounds the world, the outer wall of the cosmic egg, the seven great mountains, and the darkness that lies beyond the eight directions. The commentary notes that these are imagined places of Purāṇic tradition.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āḻi māl varaiyōṭu eṟṟum, cilavarai; aṇṭa kōḷac
cūḻ iruñ cuvaril tēykkum, cilavarai; tuḷakku il kuṉṟam
ēḻiṉōṭu eṟṟik kollum, cilavarai; eṭṭut tikkum
tāḻ iruṭ piḻampiṉ tēykkum, cilavarait taṭak kai tākki.