கம்பராமாயணம் 6371 · யுத்த 3.141

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மலைகளின் புரண்டு வீழ, வள் உகிர் நுதியால், வாங்கி,
தலைகளைக் கிள்ளும்; அள்ளித் தழல் எழப் பிசையும்; தக்க
கொலைகளின் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும்; வன
நிலைகளில் பரக்க, வேலை நீர்களை நிரம்பத் தூர்க்கும்;

பொருள் · Meaning in Tamil

மலைகளின் புரண்டு வீழ - (நரசிங்க மூர்த்தியால் வீசி எறியப்பட்ட அசுரரில் பலர்) மலைகளின் மீது புரண்டு விழ; வள்உகிர் நுதியால் வாங்கி - (அவர்களைத் தனது) கூர்மையான நகங்களின் முனையாலே இழுத்து எடுத்து; தலைகளைக் கிள்ளும் - நகத்தாலே அவர் தலைகளைக் கிள்ளும்; அள்ளி, தழல் எழ பிசையும் - தன் கைகளால் சிலரை அள்ளி எடுத்து நெருப்பு எழப்பிசையும்; தக்க கொலைகளில் கொல்லும் - அந்த அரக்கர்களின் கொலைத் தொழிலுக்குத் தக்கபடி அவர்களைக் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும் - கைகளில் எடுத்து, உடல்கள் விழ உயிர்களை மட்டும் குடிக்கும்; வான நிலைகளில் பரக்க - சிலரை எடுத்து வானப் பரப்பில் பரந்து விழவும்; வேலை நீர்களை நிரம்பத் தூர்க்கும் - சிலரை கடல் நீரில் விழவும் தூர்க்கும்.

வள் உகிர் - கூர்மையான நகம். நுதி - முனை. தக்க கொலை - அவ்வரக்கர் செய்த தீமைகளுக்குத் தகுந்த தண்டனை. தூர்த்தல் - மூடுதல் (அடைத்தல்)

தேய்க்கும், கொல்லும் எற்றும் பிளக்கும் என்றெல்லாம் நரசிங்க மூர்த்தியின் செயல்களை எதிர்காலத்தாலே கூறுவது செயல் நடந்து கொண்டிருக்கும் நிகழ்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As they tumbled down upon the mountains, it drew them in with the tips of its sharp claws
  2. and nipped off their heads; scooping them up, it kneaded them till flames leapt out; with fitting
  3. deaths it killed them; taking them up, it drank their lives; so that they spread
  4. across the regions of the sky, and so that they filled the waters of the sea, it heaped them up.

What the poem says

The Man-Lion pinches off the demons' heads with his claws and crushes them until fire springs out. Each one dies a death suited to his own cruelty. Their bodies are scattered across the sky and heaped into the sea until it is filled.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'malaikaḷiṉ puraṇṭu vīḻa, vaḷ ukir் nutiyāl, vāṅka,
talaikaḷaik kiḷḷum; aḷḷit taḻal eḻap picaiyum; takka
kolaikaḷiṉ kollum; vāṅki uyirkaḷaik kuṭikkum; vāṉa
nilaikaḷil parakka, vēlai nīrkaḷai nirampat tūrkkum;